நான் 4 முறை அறைந்தேன்.. சசிகலா புஷ்பா... இல்லை ஒரே முறை மட்டுமே அறைந்தார்-மறுக்கும் திருச்சி சிவா !
சென்னை: அ.தி.மு.க., ஆட்சி பற்றியும் முதல்வர் ஜெயலலிதா குறித்தும் அவதூறாக விமர்சித்ததால் திருச்சி சிவாவை நான்கு முறை அறைந்தேன் என அ.தி.மு.க., எம்.பி. சசிகலா புஷ்பா கூறினார்.
டெல்லி விமான நிலையத்தில் சென்னைக்கு வருவதற்காக திருச்சி சிவாவும் சசிகலா புஷ்பா தமது குடும்பத்தினருடனும் காத்திருந்தனர்.

டெல்லி விமான நிலையத்தில் தி.மு.க., எம்.பி. திருச்சி சிவாவிற்கும் அ.தி.மு.க., எம்.பி. சசிகலா புஷ்பா இடையே கைகலப்பு ஏற்பட்டதாக ஏ.என்.ஐ., செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.
இச்சம்பவம் குறித்து சசிகலா புஷ்பாவும், திருச்சி சிவாவும் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு தொலைபேசி மூலம் விளக்கம் அளித்தனர். சசிகலா புஷ்பா கூறுகையில், முதல்வர் ஜெயலலிதா குறித்து யார் விமர்ச்சித்தாலும் எனக்கு கோபம் வரும். அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது.
முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசினால் அதிமுகவினர் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். தி.மு.க., எம்.பி. திருச்சி சிவா அ.தி.மு.க., ஆட்சி பற்றியும் முதல்வர் ஜெயலலிதா குறித்தும் தவறாக விமர்சி்த்தார். அதனால் அவர் கன்னத்தில் 4 முறை அறைந்தேன். அதில் அவர் கழுத்து செயின் அறுந்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து திருச்சி சிவா கூறுகையில் " சசி்கலா புஷ்பா என்னை காரணம் இன்றி திடீரென தாக்கினார். என் சட்டையை பிடித்து இழுத்து ஒரே ஒரு முறை மட்டும் அறைந்தார். இதனால் எங்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. எதற்காக கைகலப்பில் ஈடுபட்டார் என புரியவில்லை என அவர் கூறினார்.
டெல்லி விமான நிலையத்தில் ஏராளமான பயணிகள் முன்னிலையில் தமிழக எம்.பி.,க்கள் மோதலில் ஏற்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications
