For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மும்பையில் வரும் நாட்களில் மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டப்போகுதாம்.. சொல்கிறார் வெதர்மேன் பிரதீப்ஜான்!

மும்பையில் வரும் நாட்களில் பருவமழை தீவிரமடையும் என வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மேற்கு தொடர்ச்சி மலைகளில் மிக கனமழை பெய்யலாம்- வெதர்மேன்- வீடியோ

    சென்னை: மும்பையில் வரும் நாட்களில் பருவமழை தீவிரமடையும் என வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

    மும்பை மற்றும் கடலோர மாவட்டங்களில் நாளை முதல் 3 நாட்கள் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மழை வெள்ளம் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள மாநகராட்சி முன்னேற் பாடுகளை செய்துள்ளது.

    மகாராஷ்டிராவில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாத காலம் பருவமழை காலம் ஆகும். மகாராஷ்டிராவில் தொடங்கியுள்ள பருவமழை தற்போது அடித்து ஆட தொடங்கியுள்ளது.

    மிகக் கனமழை பெய்யும்

    மிகக் கனமழை பெய்யும்

    நேற்று அரைமணி நேரம் பெய்த மழைக்கே நகரின் பல இடங்கள் வெள்ளத்தில் தத்தளிக்க தொடங்கிவிட்டது. இந்நிலையில், நாளை முதல் வரும் 11-ந்தேதி வரை 3 நாட்கள் ரத்னகிரி, சிந்துதுர்க், மும்பை, தானே, ராய்காட், பால்கர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

    வெளியே வரவேண்டாம்

    வெளியே வரவேண்டாம்

    கனமழை பெய்யும் நேரத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டா என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. மிக கனமழை பெய்யும் பட்சத்தில் மும்பை நகரில் பெரியளவில் வெள்ள பாதிப்பு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. கனமழையை எதிர் கொள்வதற்கு மும்பை மாநகராட்சி தயாராகி வருகிறது.

    இன்று முதல் 10 நாட்கள்

    இன்று முதல் 10 நாட்கள்

    இந்நிலையில் தனியார் வானிலை ஆர்வலரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், இன்று முதல் 10 நாட்கள் மும்பை முதல் கன்னியாகுமரி வரையிலானமேற்கு கடற்கரையின் உச்சி முதல் அடிமட்டம் வரையிலான பகுதிகளிலும், மேற்குதொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களிலும் தென் மேற்குப்பருவமழை தீவிரமடைந்துள்ளது என தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

    தீவிரமடையும் - எச்சரிக்கை

    தீவிரமடையும் - எச்சரிக்கை

    மேலும் மும்பையில் மழை தனது ஆட்டத்தை இன்று முதல் தொடங்கியிருப்பதாகவும், அடுத்து வரும் நாட்களில் இந்த மழை தீவிரமடையும் என்றும் பதிவிட்டுள்ளார். நகர்புறங்களில் சில நேரங்களில் தொடர்ந்து இடைவிடாது மழை கொட்டித் தீர்க்கலாம் என்றும், தெற்கு மும்பை- ரத்னகிரி- கோவா - மங்களூரு - கோழிக்கோடு பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.

    கோவாவில் மிக கடுமையாக இருக்கும்

    கோவாவில் மிக கடுமையாக இருக்கும்

    அடுத்து வரும் நாட்களில் கர்நாடக மாநிலம் மங்களூரு நகரில் அதிகமான மிக கனமழை இருக்கும். கோவாவில் மழை மிகக் கடுமையாக இருக்கும் என்பதால், சுற்றுலா செல்வதை முடிந்தவரை தவிர்க்கலாம் என்றும் பிரதீப்ஜான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இங்கெல்லாம் செல்லாதீர்கள்

    இங்கெல்லாம் செல்லாதீர்கள்

    மஹாராஷ்டிரா முதல் கேரளா வரையிலான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், மலைப்பகுதிகளை ஒட்டிய இடங்கள் மற்றும் தமிழகத்திலும் ஒரு சில மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தார் அதனை அடுத்த 10 நாட்களுக்கு ரத்து செய்யுமாறும் பிரதீப்ஜான் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

    English summary
    Tamilnadu weatherman Pradeep john sayd Mumbai Rains has started today and rains will continue with heavy spell at times. It might be rain continuously in the city. Avoid all ghat areas from Maharashtra to Kerala and also in some parts Tamil Nadu for the next 10 days if u have planned for a vacation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X