கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி... புதுச்சேரியில் விபரீதம் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரியில் கணவரை, தன்னுடைய கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொன்று புதைந்துவிட்டு, போலீசில் புகார் கொடுத்து நாடகமாடிய மனைவியைபோலீசார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்தவர் விவேக் பிரசாத். இவர் குடி தண்ணீர் சுத்திகரிப்பு மற்றும் விற்பனை தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவருடைய மனைவி ஜெயந்தி. ஜெயந்திக்கும் விவேக் பிரசாத்தின் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஷேக் முகமதுவுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் இருவரும் இணைந்து வாழ முடிவு செய்துள்ளனர்.

 Murder due to Extra marital affair in Puducherry

அதற்காக தன் கணவரையே கொலை செய்ய முடிவு செய்த ஜெயந்தி, ஷேக் முகமதுவுடன் சேர்ந்து கணவரை கொன்றுள்ளார். மேலும் யாருக்கும் தெரியாமல் பிளாஸ்டிக் பையில் வைத்து கட்டி புதைத்துவிட்டு, போலீஸுக்கு சென்று கணவரை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.

போலீசார் நடத்திய விசாரணையில் ஜெயந்திதான் அவருடைய கணவரை கொலை செய்தார் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அதையடுத்து ஜெயந்தியையும் ஷேக் முகமதுவையும் போலீசார் கைது செய்தனர்.

சமீபகாலமாக திருமணத்தை மீறிய ஊறவுகளும் அதனால் நடக்கும் கொலைச் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இது மிகப் பெரிய சமூகப் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இதற்கான சமூக, உளவியல் காரணங்களை ஆராய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Puducherry Jayanthi had extra marital affair with her employee Shiek Mohamed and both of them killed Jayanthi's husband Vivek prasath. Police arrested both of them.
Please Wait while comments are loading...