ரஜினி அரசியலுக்கு வந்தால் கடுமையாக எதிர்த்து அரசியல் செய்வோம்... கொந்தளிக்கும் சீமான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ரஜினி அரசியலுக்கு வந்தால் நிச்சயம் எதிர்ப்போம் சீமான் அறிவிப்பு

  சென்னை : ரஜினி அரசியலுக்கு வந்தால் அவரை எதிர்த்து கடுமையான அரசியல் செய்வோம் என்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

  சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறியதாவது : தமிழ்நாட்டில் மட்டும் தான் எல்லா ஜனநாயகமும் பேசுவார்கள், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று என் தேசத்தில் மட்டும் தான் சொல்வார்கள். காவிரிப் பிரச்னையின் போது சொந்த நாட்டிலேயே மக்கள் அகதிகள் போல விரட்டியடிக்கப்பட்டார்களே அப்போது எங்கே போனார் இவர்.

  பேருத்துகள் அடித்து நொறுக்கப்பட்டதோடு, ஆண்களும், பெண்களும் தாக்கப்பட்டனர். அப்போது ஒரே நாடு ஒரே தேசத்தில் ஏன் மக்களை அடித்து விரட்டுகிறார்கள் என்று யாரும் கேட்கவில்லையே ஏன்.

  ரஜினி அரசியலுக்கு வந்தால் அவரை கடுமையாக எதிர்த்து அரசியல் செய்வோம். ரஜினிக்கு என்ன கொள்கை இருக்கிறது மக்களிடம் கொண்டு செல்ல, அவர் என்ன சொல்கிறார் சிஸ்டம் சரியில்லை என்கிறார். சிஸ்டம் என்றால் அமைப்பு, அதைத் தான் நாங்களும் அமைப்பு சரியில்லை, எந்தெந்த அமைப்பு சரியில்லை என்று சொல்லி வருகிறோம். அதே போல ரஜினியும் அவர் எந்த சிஸ்டம் சரியில்லை என்று தெளிவாக சொல்ல வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.

  இனம் மாறுவதில் இருந்து தொடங்குகிறது ஏமாற்றம்

  இனம் மாறுவதில் இருந்து தொடங்குகிறது ஏமாற்றம்

  ரஜினியின் அரசியல் தமிழகத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டு வராது. பெங்களூரு எங்களின் வாழ்விடம், கர்நாட்காவிற்குள்ளேயே நாங்கள் போகவில்லை. பெங்களூரில் இருக்கும் 90 சதவீதம் பேர் தமிழர்கள், அவர்களை என்ன மாதிரி பார்க்கிறார்கள் அவர்கள் கன்னடர்கள்.

  எங்கு பிறந்தாலும் தமிழன் தமிழனே, எங்கு வாழ்ந்தாலும் அயலான் அயலானே. ஒருவர் ஏன் இனம்மாறுகிறார் அதில் இருந்தே தொடங்குகிறது ஏமாற்றம். ஏன் தமிழ்இனத்திற்கு மாற வேண்டும்.

  எல்லோரும் தமிழராகி விட முடியாது

  எல்லோரும் தமிழராகி விட முடியாது

  மராட்டிய மாநிலத்தில் 26லட்சம் தமிழர்கள் இருக்கிறார்கள், அவர்கள் தமிழர்களா மராட்டியர்களா? இனம், மொழி என்று பேசும் போது ஒருவர் நடுங்குகிறார் என்றால் அவர் மற்றொரு நிலத்தில் நிற்கிறார் என்பதே அர்த்தம். மலையாளிக்கு தெரிகிறது முல்லைப்பெரியாறு பிரச்னை வந்தால் உடனே தமிழர்களை அடையாளம் கண்டு அடித்து விரட்டுகிறான். கன்னடருக்கு தெரிகிறது காவிரி நீர் பிரச்னை வந்தால் உடனே தமிழனை விரட்டி அடிக்கிறான்.

  வெள்ளைக்காரம் இந்தியனா?

  வெள்ளைக்காரம் இந்தியனா?

  ஏன் இனம் மாறுகிறீர்கள் என்பதே என்னுடைய கேள்வி, விஷால் தான் தமிழனாகி விட்டதாக சொல்கிறார். அப்ப அவர் தமிழர் என்றால் நாங்கள் யார்? வெள்ளைக்காரன் நாட்டை 300 ஆண்டுகள் ஆண்டதால் அவன் இந்தியன் ஆகி விட முடியமா? ஆண்பிள்ளையாக இருப்பவர் எல்லாம் என்னுடைய அப்பாவாகி விட முடியாது. வெள்ளைக்காரன்களிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் தான் தண்டவாளம் போட்டார்கள், அணை கட்டினார்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டினார்கள்.

  ஒதுங்கி இருந்தாலே போதும்

  ஒதுங்கி இருந்தாலே போதும்

  8 கோடி தமிழனில் எவனுக்குமே தகுதியில்லை, யாருமே யோக்கியன் இல்லை என்பதைத் தான் சொல்ல வருகிறார்களா இவர்கள். அறத்தின் வழியில் ஆட்சி செய்த மறவர் கூட்டம் தமிழர் கூட்டம், எங்களுக்கு யாரும் எதையும் கற்றுத் தரத் தேவையில்லை. நீங்கள் ஒதுங்கி இருந்தாலே போதும் நாங்கள் பார்த்துக் கொள்வோம். இவர் வந்து கட்சி தொடங்கி ஆட்சி செய்தால் நிச்சயம் அண்டை மாநிலங்கள் எங்களைப் பார்த்து காறி உமிழும். இப்போது சிரிப்பவர்கள் பின்னர் காறித் துப்புவார்கள்.

  சந்தர்ப்பவாத அரசியல்

  சந்தர்ப்பவாத அரசியல்

  போராட்டங்கள் நடத்தாமல் நேரடியாக கோட்டைக்கு போய் கொடி பிடிக்கப் பார்க்கிறார்கள். நடித்துவிட்டு ரசிகர்களின் கைதட்டல்களை வாங்கிவிட்டால் எளிதில் அரசியலுக்கு வந்துவிடலாம் என்பதே கீழ்த்தரமான பார்வை. திரையுலகில் உள்ள புகழை வைத்துக்கொண்டு அரசியலுக்கு வருவேன் என்று சொல்வது சந்தர்ப்பவாதம் தானே என்று சீமான் கொந்தளித்துள்ளார்.

  பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

  English summary
  Naamtamizhar party organiser Seeman told to reporters at Chennai that will do politics against of Rajinikanth, and criticised that Rajini has no cclear policies till now.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற