தமிழர்களே, தமிழர்களே... உங்களுக்காக (இங்கேயே தங்கி) சேவை செய்ய நக்மாவும் வருகிறாராம்!
சென்னை: நடிகை நக்மா தமிழகத்திலேயே தங்கி மக்களுக்கு சேவையாற்ற தயார் என்று அறிவித்துள்ளார். குஷ்பு பாணியில், குஷ்பு போல தமிழகத்திலேயே செட்டிலாகும் திட்டத்தில் அவர் இருப்பதாக தெரிகிறது.
நக்மாவின் அறிவிப்பைப் பார்த்தால் வரும் சட்டசபைத் தேர்தலில் வடக்கில் நக்மாவும், மேற்கில் குஷ்புவும் தேர்தலில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கலாம் போல.
கவர்ச்சி அரசியலுக்குப் பழக்கப்பட்டுப் போன நமது மாநில அரசியலுக்கு மேலும் "வலு" கூட்டும் வகையில் நக்மாவின் தமிழக "தங்கல்" அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நக்மா மொரார்ஜி
நக்மா எனப்படும் நக்மா மொரார்ஜி இதுகுறித்து கூறுகையில், தேவைப்பட்டால் சென்னையிலேயே தங்க முடிவெடுப்பேன். எனக்கு இங்கு வீடு உள்ளது. எனது தங்கை இங்குதான் வசிக்கிறார் (ஜோதிகா).

இடம் பெயர தயங்க மாட்டேன்
எனக்குத் தேவைப்பட்டால் எனது அரசியல் களத்தை இங்கு மாற்ற நான் தயங்க மாட்டேன். நான் இங்கு செட்டிலாகத் தேவையான அனைத்துமே இங்கு ஏற்கனவே உள்ளன என்று கூறியுள்ளார் நக்மா.

இங்கேயே சுற்றுகிறார்
நக்மா தென் மாநில அரசியலில் குறிப்பாக தமிழக அரசியலில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்திருக்கிறார். அடிக்கடி தமிழக காங்கிரஸ் விவகாரங்களில் தலையிடுகிறார். நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அவர் தற்போது அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருக்கிறார்.

குஷ்புவுக்குப் போட்டியா?
தமிழக காங்கிரஸ் கட்சியில் ஏற்கனவே நடிகை குஷ்பு இருக்கிறார். அவர் தேசிய செய்தித் தொடர்பாளராக இருக்கிறார். இந்த நிலையில் அவருக்குப் போட்டியாக நக்மா கிளம்பியிருக்கிறாரா என்று காங்கிரஸ் கட்சியிலேயே பேசிக் கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

மாறி மாறி சந்திப்பு
சமீபத்தில் நடிகர் ரஜினியைச் சந்தித்தார் நக்மா. அடுத்து ஸ்டாலினைச் சந்தித்தார். கனிமொழியையும் பார்த்துள்ளார். இதெல்லாம் எதற்காக என்று புரியாமல் (சரியான காரணம் தெரியாமல்) காங்கிரஸ் கட்சியினரே கூட குழப்பமாக உள்ளனர். இந்த நிலையில் தான் நிரந்தரமாக சென்னையில் தங்கத் தயார் என்று நக்மா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழர்களே தமிழர்களே.. நக்மாவின் சேவையையும் பெற்றுக் கொள்ளத் தயாராக இருங்கள்!
-
சிவி சண்முகத்துக்கு கடைசி சான்ஸ் இதுதான்! எடப்பாடியின் முன் மண்டியிடும் 14 பேர்! பின்னணி காரணம் என்ன -
திருமாவளவன் ஆர்எஸ்எஸின் பேரப்பிள்ளை.. தவெகவில் நடப்பது கழுதை பேரம்.. வளைத்து வளைத்து அடித்த பொன்னார் -
லீமா ரோஸ் செய்த டீல்? குதிரை வேகத்தில் குதிரை பேரம்? 20 கோடிக்கு 10 அதிமுக எம்எல்ஏ வர்ற போறாங்களாமே -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
கூட்டுறவு சங்க பயிர்க்கடன் தள்ளுபடி.. விஜய் அரசு தந்த அல்வா! 2024 முதலே கணக்கெடுங்க: சீறிய எஸ்டிபிஐ -
69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்தா? சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை.. விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications