For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பரோலில் விடுவிக்க கோரி நளினி மனு: சிறைத்துறைக்கு ஐகோர்ட் நோட்டீஸ்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Nalini seeks parole for one month
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள நளினி, தம்மை பரோலில் விடுவிக்க கோரி தொடர்ந்த வழக்கில், வேலூர் சிறைத்துறை பதில் அளி்க்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நளினி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தூக்குத் தண்டனை கைதியான அவரது கணவர் முருகனும் வேலூர் சிறையில் உள்ளார்.

இந்நிலையில், 90 வயதான தனது தந்தை சங்கர நாராயணனுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை கவனிக்க, ஒரு மாதம் பரோலில் விடுவிக்க வேண்டும் என கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த மனு தொடர்பாக பிப்ரவரி 11ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேலூர் சிறைத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

English summary
Rajiv Gandhi murder convict Nalini has sought one month parole. She has filed a petition with the HC
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X