இதப் பாருங்கப்பா முதல்ல... பிக்பாஸ் பாணியில் நம்ம விவசாயம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கமலின் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்த நிறைய அரசியல்வாதிகள், பொதுமக்கள் மட்டுமின்றி சமூக வலைத்தலங்களிலும் 'இதெல்லாம் ஒரு நிகழ்ச்சியா... இவர்கள் ஏன் விவசாயிகளுக்காக கிராமங்களில் இருந்து இந்த மாதிரி நிகழ்ச்சியை நடத்தக் கூடாது' எனக் கேள்வி எழுப்பினர்.

அந்த கேள்வியை உள்வாங்கி ஒரு நிகழ்ச்சியை நடத்த வருகிறது 'நம்ம விவசாயம்' குழு. அதே பிக் பாஸ் பாணியில் 100 நாள் நிகழ்ச்சிதான் இதுவும்.

Namma Vivasayam, an imitation of Big Boss

இதற்காக காஞ்சிபுரம் அருகே 5 ஏக்கர் நிலப்பரப்பில் இதற்கான வேலையைத் துவங்கி விட்டார்கள். விவசாயத்தில் நெல் நாற்று நடுவதில் ஆரம்பித்து கதிர் அறுவடையாகும் வரை அவர்களின் செயல்களைப் படம்பிடித்து ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்ப உள்ளனர்.

இதில் நம் நாட்டின் கலாச்சாரம், பண்பாடு, நாட்டு மருத்துவம் மற்றும் பண்டைய வீர விளையாட்டுகளை காண்பிக்க உள்ளனர். இதற்காக குடிசை வீடுகள் போன்ற செட் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.

இதற்கான நடிகர்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது. இதனை திரைப்பட கல்லூரி மாணவர் அன்பரசன் இயக்க நம்ம மூவிஸ் சார்பாக ஆர்.கே தயாரிக்கிறார்.​

Bigg Boss Tamil, Film making has been made difficult says Kamal Hassan-

பிக்பாஸை விட சுவாரஸ்யமான நிகழ்ச்சியாக இதனைத் தயாரித்து வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Namma Vivasayam is a new programme imitated from bigboss that will be aired soon.
Please Wait while comments are loading...