டிடிவி தினகரன் காலில் வந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விழ வேண்டும் - நாஞ்சில் சம்பத்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  Nanjil Sampath Tease OPS-oneindia Tamil

  சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள வேண்டுமானால் டிடிவி தினகரன் காலில் வந்து விழ வேண்டும் என்று செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

  அதிமுகவின் இரு அணிகளும் இன்று இணைய உள்ளன. இது தொடர்பான ஆலோசனைகள், பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த சூழ்நிலையில் டிடிவி தினகரன் இல்லத்திலும் ஆலோசனைகள் நடைபெற்றன. 15க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் தினகரன் இல்லத்தில் ஆலோசனை நடத்தினர்.

  Nanjil Sampath goes against Edappadi Palanisamy

  ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், கட்சியைக் காட்டிக்கொடுத்து சின்னத்தை முடக்கியவர் ஓ.பன்னீர் செல்வம் என்று குற்றம் சாட்டினார்.

  நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எதிர்த்து வாக்களித்தவர் ஓ.பன்னீர் செல்வம். சசிகலாவை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.

  டிடிவி தினகரனை நீக்க யாராலும் நீக்க முடியாது. நீக்குவதாக அறிவித்த பின்னர்தான் மேலூர் பொதுக்கூட்டம் நடைபெற்றது. லட்சக்கணக்கனோர் திரண்டனர். அப்போது இவர்கள் என்ன செய்தனர்.

  டிடிவி தினகரனுக்குத்தான் 122 எம்எல்ஏக்கள் ஆதரவாக இருக்கின்றனர். ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்று அங்கே சிலர் தங்கியிருக்கின்றனர் என்றார்.

  ஸ்டாலின் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதற்கு டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த நாஞ்சில் சம்பத், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஆட்சியை காப்பாற்றிக்கொள்ளடிடிவி தினகரனின் காலில் வந்து விழ வேண்டும் என்று கூறினார்.

  ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைவதற்கு கெடு விதித்த டிடிவி தினகரன், தற்போது அணிகள் இணைப்பில் ஆர்வம் காட்டாமல் இருப்பது ஏன் என்பது தொண்டர்களின் கேள்வியாக உள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Nanjil Sampath has come down heavily on CM Edappadi Palanisamy.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற