For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சேலம்: பஸ்சின் டீசல் டேங்க் உடைந்து தீப்பிடித்தது 52 பயணிகள் தப்பினர்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சேலம்: சேலத்தில் தனியார் பேருந்தின் டீசல் டேங்க் உடைந்து தீப்பிடித்து எரிந்தது. பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக இறங்கியதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் இருந்து சேலத்துக்கு இன்று அதிகாலை ஒரு தனியார் பேருந்து வந்தது. பஸ்சை மணிவேல் என்பவர் ஓட்டி வந்தார். பஸ்சில் 52 பயணிகள் இருந்தனர்.

சேலம் அம்மாப்பேட்டை மிலிட்டரி ரோடு பகுதியில் பேருந்து வந்து கொண்டிருந்தது. ரோட்டை ஒருவர் மீது மோதாமல் இருக்க பஸ் டிரைவர் பஸ்சை வலது புறமாக திருப்பினார். இதனால் ரோட்டின் தடுப்புசுவர் மீது பேருந்து மோதி சென்றது. இதில் பேருந்தின் டீசல் டேங்க் தடுப்பு சுவற்றில் மோதி தீப்பிடித்து கொண்டது.

தீ மளமளவெள பஸ் முழுவதும் பரவ தொடங்கியது. இதை தொடரந்து பயணிகள் அலறியடித்துக் கொண்டு கீழே இறங்கினர். இது குறித்து செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயனைப்பு வீரரக்ல வந்து தீயை அணைத்தனர். பஸ் முற்றிலும் எரிந்து சேதமானது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

English summary
Passengers of a private bus had a narrow escape after the vehicle hit a median and caught fire at Ponnammapet in Salem on Wednesday morning
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X