மரணிக்கும் முன் ராஜ்யசபா எம்பி பதவிக்காக மாயாவதியிடம் சீட் கேட்ட சசிகலா கணவர் நடராஜன்- பகீர் தகவல்

சென்னை: சசிகலாவின் கணவர் நடராஜன் மரணிப்பதற்கு முன்னதாக ராஜ்யசபா எம்.பி பதவியை பெறுவதற்காக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியிடம் பேரம் பேசியதாக ஒரு தகவல் பரோலில் வந்த சசிகலாவிடம் தெரிவிக்கப்பட்டதாம்.
தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் நடராஜனுக்குச் சொந்தமான தமிழரசி திருமண மண்டபத்தில் இன்று படத்திறப்பு விழா நடக்க இருக்கிறது. ' பொது நிகழ்ச்சிகளில் பரோல் கைதி கலந்து கொள்ளக் கூடாது' என்ற விதியை வழக்கறிஞர்கள் சிலர் சுட்டிக் காட்டியுள்ளனர்.

அதேநேரம், உள்ளரங்கத்தில் நடக்கும் குடும்ப விழா என்பதால் சிக்கல் வருவதற்கு வாய்ப்பில்லை எனச் சிலர் சமாதானப்படுத்தியுள்ளனர். இதையடுத்து, இந்நிகழ்ச்சியில் சசிகலாவும் பங்கேற்க இருக்கிறார்.
இந்தநிலையில், தன்னை சந்திக்க வரும் ஆதரவாளர்களிடம் மனம் திறந்து பேசிக் கொண்டிருக்கிறார். நடராஜனுக்கு வேண்டப்பட்ட சிலர் சசிகலாவை சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது, நடராஜனின் தமித்தேசிய செயல்பாடுகளைப் பற்றி விவரித்தவர், அடுத்துச் சொன்ன விஷயம்தான் ஹைலைட்.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்னதாக, அரசியல்ரீதியாக நேரடியாகக் களமிறங்கவும் நடராஜன் திட்டமிட்டிருந்தார். அதற்காக, உ.பியின் முன்னாள் முதல்வர் மாயாவதி தரப்பிடம் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டிருந்தார். உ.பி கேடரில் இருந்து ராஜ்யசபா எம்.பி ஆக விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதில் அளித்த மாயாவதி தரப்பினர், ' அரசியல்ரீதியாக இப்போது சூழல்கள் சரியாக இல்லை. நேரம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்' எனக் கூறிவிட்டனர். ஆனாலும், ' அரசியலில் செயல்படுவதற்கு எம்.பி பதவி அவசியம்; இதன்மூலம் டெல்லி அரசியலில் நேரடியாக ஈடுபடலாம்; அதன்மூலம் உங்கள் தரப்பை வலுவாக்க முடியும்' என அவர் நினைத்தார். அவருக்கு நன்கு நெருக்கமான டெல்லி சோர்ஸ்கள் மூலம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார். அதற்குள் காலம் அவரை அழைத்துக் கொண்டது' என விவரித்தார். இந்தத் தகவலை ஆச்சரியத்தோடு கேட்டுக் கொண்டாராம் சசிகலா.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!