சர்ச்சில் கேமரா.. பெண்களை படம்பிடித்து மார்பிங் செய்து பாலியல் உறவுக்கு அழைத்த போதகர்.. ஷாக் தகவல்
சர்ச்சில் சுழல் கேமரா பொருத்தி பெண்களை படம்பிடித்து அதனை மார்பிங் செய்து மிரட்டி பாலியல் உறவுக்கு போதகர் ஸ்டான்லி குமார் அழைத்துள்ளார்.
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் சர்ச்க்கு வரும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மதபோதகர் ஸ்டான்லி குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையல் தான் அவர் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சர்ச்சில் சுழல் கேமராவில் பெண்களை படம்பிடித்து அதனை மார்பிங் செய்து பாலியல் இச்சைக்கு பெண்களை அழைத்து மிரட்டியது அதிர வைத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம், வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் தலைமறைவானார்.
இதுதொடர்பான புகாரை விசாரித்து வந்த போலீசார் பெனடிக்ட் ஆன்றோவை கைது செய்தனர். தேவாலயத்திற்கு வரும் பெண்களுடன் பேசி அவர்களின் செல்போன் எண்களை பெற்றுக்கொண்டு ஆபாசமாக பேசியது தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இன்னொரு மதபோதகர் கைது
இதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இன்னொரு போதகர் ஸ்டான்லி குமார் மீதும் பாலியல் புகார் எழுந்த நிலையில் அவரையும் போலீசார் கைது செய்தனர்.கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் பகுதியை சேர்ந்தவர் ஸ்டான்லி குமார்(49). இவர் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள தேவாலயத்தில் போதகராக உள்ளார். இவர் தேவாலயத்திற்கு வருவோரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். தவறான எண்ணத்தில் தொடர்ந்து பாலியல் சீண்டலில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் தற்போது போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் ஸ்டான்லி குமார் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாலியல் தொல்லை
அதாவது ஸ்டான்லி குமார் மீது பெண் ஒருவர் போலீஸில் புகார் கொடுத்துள்ள நிலையில் அவரது வக்கிரமான செயல்கள் தெரியவந்துள்ளது. அந்த புகாரில் போதகர் ஸ்டான்லி குமார் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரில், எனது மகளுக்கு 30 வயது ஆகிறது. அவர் தீராத வயிற்று வலியால் பாதிக்கப்பட்டார். பிரார்த்தனைக்காக சர்ச்சுக்கு அழைத்து சென்றேன். அங்கு என் மகளுக்கு போதகர் ஸ்டான்லி குமார் பாலியல் தொல்லை கொடுத்தார். மேலும் வெளியில் சொன்னால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினார். இதனால் நாங்கள் மன்னித்து விட்டோம் என தெரிவித்துள்ளார்.

பெண் குளிப்பதை படமெடுத்து
மேலும் சர்ச்க்கு வரும் இன்னொரு பெண் குளிப்பதை படம் எடுத்துவைத்துக் கொண்டு அவரையும் மிரட்டியுள்ளார். பாலியல் துன்புறுத்தல் செய்ய பழைய போட்டோவை காட்டி மிரட்டினார். இதுதொடர்பான புகாரும் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் உள்ளது. மேலும் செல்போன் எண்களை வாங்கி பெண்களிடம் பேசி வந்துள்ளார்.

சுழல் கேமரா
இதுதவிர சர்ச்சுக்குள் சுழலும் கேமிரா வைத்து பெண்களைப் படம் எடுத்து மார்பிங் மூலம் ஆபாசமாக சித்தரித்து தகாத உறவுக்கு அழைத்து மிரட்டல் விடுக்கிறார் என தெரிவித்துள்ளார். இந்த புகாரால் அதிர்ந்துபோன போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தொடர்ச்சியாக சர்ச் போதகர்கள் பாலியல் புகாரில் சிக்கி கைதாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
தமிழக அரசால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ள துறைகள்.. விவரம் -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
வாடகை வீட்டில்.. பழுதுபார்ப்பு செலவு யாருடைய பொறுப்பு? தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்! -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே! -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்!












Click it and Unblock the Notifications