For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மூடும் வரை வீடுவாசல் செல்லமாட்டோம் #NeduvasalProtest

வாடி வாசல் திறக்கும் வரை வீடு வாசல் செல்ல மாட்டோம் என்று போராடிய இளைஞர்கள், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மூடுவிழா நடத்தும் வரை வீடு வாசலுக்கு செல்ல மாட்டோம் என்று இளைஞர்கள் போராடி வருகின்றனர

By Mayura Akilan
Google Oneindia Tamil News

புதுக்கோட்டை: மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மூடுவிழா நடத்தும் வரை நெடுவாசலை விட்டு வீடு வாசலுக்கு செல்ல மாட்டோம் என்று இளைஞர்கள் போராடி வருகின்றனர்.

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 15 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயம் மட்டுமல்லாது தங்களின் உடல்நலம் பாதிக்கப்படும் என்பது கிராம மக்களின் கருத்து.

எனவே நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் மாணவர்கள் கருத்துக்களை பதிவிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு போராட்டம் போல மாநிலம் முழுவதும் கல்லூரிகளில் வகுப்புகளை புறக்கணித்து விட்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். திட்டத்தைக் கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறிவருகின்றனர்.

நெடுவாசல் போராட்டம்

சமூக வலைத்தளங்களில் #SaveNeduvaasal , நெடுவாசல் போராட்டம் என்று ஹேஷ்டேக் போட்டு கருத்துக்களையும், கார்டூன்களையும் பதிவிட்டு வருகின்றனர். விவசாயிகளின் பிரச்சினையை இதை விட யாராலும் கூற முடியாது.

மாணவர்கள் போராட்டம்

விவசாய நிலத்தை அளிக்க நினைச்சா போராட்டம் வேற மாதிரி இருக்கும்னு மிரட்டிட்டு போறாங்க என்று மாணவர்களின் போராட்டத்திற்கு மீம்ஸ் போட்டிருக்காங்க.

அடுத்த தலைமுறைக்கான போராட்டம்

எந்த போராட்டம் என்றாலும் தேவர்மகன் சிவாஜியும், கமலும் இடம் பெறத் தவறுவதில்லை. இது அடுத்த தலைமுறையை காக்கும் போராட்டம் என்று பதிவிட்டுள்ளனர்.

விவசாயம் காக்கும் போராட்டம்

இது வீண் போராட்டம் அல்ல... வருங்காலம் கேள்விக்குறி ஆகாமல் இருப்பதற்காகவே இந்த போராட்டம் நடத்துகிறோம் என்று கூறியுள்ளனர்.

முடிவுக்கு வராது

மத்திய அரசு திட்டத்தைக் கைவிடும் வரை போராட்டம் முடிவுக்கு வராது என்று கூறியுள்ளனர் மாணவர்கள்.

English summary
The15 day of protests against the hydrocarbon protest at Neduvasal in Pudukkottai on Wednesday saw protesters receiving words of advice from those who have took the path of mass protests in the past.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X