For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காந்தியின் நூற்றாண்டு பிறந்தநாள்: போர்பந்தரில் இருந்து குமரிக்கு ரயில் வேண்டும்- குளச்சல் எம்எல்ஏ

மகாத்மா காந்தியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை ஒட்டி, போர்ப்பந்தரில் இருந்து கன்னியாகுமரிக்கு நேரடியாக ரயில் சேவை ஏற்படுத்த வேண்டும் என்று குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஜெ.ஜி. பிரின்ஸ் கோரிக்கை வ

By Shyamsundar
Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: மகாத்மா காந்தியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை ஒட்டி, போர்ப்பந்தரில் இருந்து கன்னியாகுமரிக்கு நேரடியாக ரயில் சேவை ஏற்படுத்த வேண்டும் என்று குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஜெ.ஜி. பிரின்ஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்தியா முழுக்க மகாத்மா காந்தியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. வரும் 2019 அக்டோபர் 2ம் தேதியில் இருந்து, அக்டோபர் 2020 வரை இந்த விழா நடக்க உள்ளது. இதற்காக நாடு முழுக்க பல திட்டங்கள் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

Need Train from Porbandar to Kanniyakumari for Gandhi Birth anniversary asks J.G Prince M.L.A

காந்திக்கு இந்தியாவில் பல இடங்களில் நினைவிடம் இருப்பது போலவே, கன்னியாகுமரியில் நினைவிடம் இருக்கிறது. காந்தியின் சாம்பல் இந்தியா முழுக்க பிரித்து அனுப்பப்பட்டு, கடைசியாக, ஒரு பகுதி கன்னியாகுமரி கடலில் கரைக்கப்பட்டது.

பின்னர் அவர் நினைவாக 1956ல் அங்கு பெரிய நினைவு மண்டபமும் கட்டப்பட்டது. உலகம் முழுக்க தினமும் பலர் இந்த நினைவு மண்டபத்தை பார்க்கக் வருகை தருகிறார்கள்.

இந்த நிலையில் காந்தி பிறந்த இடமான போர்பந்தரில் இருந்து கன்னியாகுமரிக்கு நேரடியாக ரயில் எதுவும் இல்லை. இதனால் போர்ப்பந்தரில் இருந்து கன்னியாகுமரிக்கு நேரடியாக ரயில் சேவை ஏற்படுத்த வேண்டும் என்று குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஜெ.ஜி. பிரின்ஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

அவர் பிறந்த நாள் விழாவை ஒட்டி இதை ஏற்படுத்த கோரிக்கை வைத்துள்ளார். தற்போது போர்பந்தரில் இருந்து கொச்சுவேலிக்கு வாராந்திர ரயில் செல்கிறது. கொச்சுவேலி ரயில் நிலையம் குமரியில் இருந்து 85 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இதை குமரி வரை நீட்டித்து, அந்த ரயிலுக்கு மகாத்மாவின் பெயரை வைக்க வேண்டும் என்று இவர் கோரிக்கை வைத்துள்ளார்.

அடுத்த மாதம் வெளியாக உள்ள ரயில்வே அட்டவணையில் இதற்கான திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று இவர் கோரிக்கை வைத்து இருக்கிறார்.

English summary
Need Train from Porbandar to Kanniyakumari for Gandhi Birth anniversary asks J.G Prince M.L.A.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X