நீட் தேர்வில் மாநிலத்திற்கு ஏற்ப மாற்றப்பட்ட வினாத்தாள்கள்.. ஒப்புக்கொண்ட மத்திய அமைச்சர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுவதும் அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுக்கு ஒரே மாதிரியான கேள்வித்தாள் வழங்கப்படும் என மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி அளித்துள்ளார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜவடேக்கர் நிருபர்களிடம் கூறியதாவது:

நீர் தேர்வை பிராந்திய மொழிகளில் எழுதுபவர்களுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட கேள்வித்தாள்கள் வழங்கப்படும். அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு ஒரே கேள்வித்தாள் மாநில மொழிகளில் வழங்கப்படும்.

வங்கமொழி

வங்கமொழி

இந்த ஆண்டு வெவ்வேறு மொழிகளில் எழுதியவர்களுக்கு வெவ்வேறு மாதிரியான கேள்வித்தாள்களை சிபிஎஸ்இ வழங்கியுள்ளது. வங்க மொழியில் வழங்கப்பட்ட கேள்வித்தாள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தாள்களை விட கடினமாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

ஒரே கேள்வித்தாள்

ஒரே கேள்வித்தாள்

அடுத்த ஆண்டு முதல் மொழி மாற்றம் செய்யப்பட்ட கேள்வித்தாள்கள் வழங்கப்பட உள்ளதால் இந்த பிரச்னை எழாது. எனவே மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை.

நீட் தேர்வு

நீட் தேர்வு

அதே போல் ஒரே தேசம் ஒரே தேர்வு என்ற கொள்கையின் அடிப்படையில் அடுத்த ஆண்டு முதல் இன்ஜினியரிங் படிப்புகளுக்கும் நீட் தேர்வு நடத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. தற்போது அது பேச்சு வார்த்தைமட்டத்தில் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

We Request PM to Cancel neet Exam For Tamilnadu Says Minister Vijaya basker-Oneindia Tamil
தமிழகத்தில்

தமிழகத்தில்

தமிழில் கேட்கப்பட்ட நீட் கேள்வித்தாளும் கஷ்டமானதாக இருந்ததாக மாணவர்கள் கூறினர். நீட் தேர்வில் விலக்கு பெற்றுத்தருவதில் மாநில அரசு தோல்வியடைந்த நிலையில், கேள்வித்தாளும் கஷ்டமாக கேட்கப்பட்டதால் தமிழக மாணவர்களுக்கு இந்த வருடம் பெரும் பின்னடைவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
NEET exams will have same question in all the states in the coming years, says union minister Prakash Javadekar.
Please Wait while comments are loading...