நீட்: அரசு கால தாமதத்தினால் ஒரு உயிரை இழந்துள்ளோம் - நீதிபதி கிருபாகரன் வேதனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் மக்களை நம்ப வைத்து அரசு ஏமாற்றி விட்டது என்று நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களை நம்ப வைத்து அரசு ஏமாற்றி விட்டது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

NEET issue: HC judge condems TamilNadu government

மாணவர்களை நம்ப வைத்து ஏமாற்ற கூடாது என்று அரசுக்கு நீதிபதி அறிவுரை கூறியுள்ளார். நீட் தேர்வு தொடர்பாக ஊடகங்களிடம் பேச கூடாது என்று அமைச்சருக்கு அறிவுரை கூறினார்.

ஆகஸ்ட் மாதம் உத்தரவு பிறப்பித்தும் குழு அமைப்பதில் தாமதம் ஏன் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, வல்லுநர்களை கண்டறிந்து குழு அமைக்க ஒரு மணி நேரம் போதாதா என்றும் கேள்வி எழுப்பினார்.

அரசு காலம் தாழ்த்தியதால்தான் ஒரு உயிரை இழந்துள்ளோம் என்று நீதிபதி கிருபாகரன் வேதனையுடன் தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Judge of Madras high court Justice Kirubakaran on Friday condemned its silence on the law enacted by Tamil Nadu against the NEET.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற