For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்ததற்கு நன்றி, எதிர்காலத்திலும் நிர்பந்திக்கக் கூடாது: மோடிக்கு ஜெ

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்து அவசர சட்டம் கொண்டு வந்ததற்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மருத்துவ நுழைவுத் தேர்வை ஓராண்டுக்கு ரத்து செய்யும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து அவசர சட்டத்திற்கான கோப்பில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கையெழுத்திட்டார்.

இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

NEET: Jaya writes to Modi

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,

'நடப்பாண்டு மருத்துவ நுழைவுத் தேர்வை ஒத்தி வைத்ததற்கு நன்றி. அவசர சட்டத்தால் இட ஒதுக்கீட்டின் பயனை மாணவர்கள் இந்த ஆண்டு அனுபவிப்பார்கள்.

நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பால், லட்சக்கணக்கான மாணவர்களும், பெற்றோர்களும், மனஅழுத்தத்தில் இருந்து விடுபட்டுள்ளனர். எதிர்காலத்திலும் மருத்துவ நுழைவுத் தேர்வை எழுத நிர்பந்திக்க கூடாது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
CM Jayalalithaa has sent a letter to PM Modi thanking him for cancelling medical entrance exam for a year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X