குருமூர்த்தி சர்ச்சை டிவிட்... சமூக வலைதளங்களில் குவியும் கண்டனங்கள்..!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  முதல்வர், துணை முதல்வர் குறித்து துக்ளக் குருமூர்த்தி அநாகரீக டிவீட்...வீடியோ

  சென்னை: முதல்வர் மற்றும் துணை முதல்வர் குறித்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பதிவிட்டிருந்த டிவிட்டுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

  தினகரனின் ஆதரவாளர்கள் 6 மாதத்திற்கு பிறகு நீக்கப்பட்டுள்ளது குறித்து துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி டிவிட்டரில் கருத்த தெரிவித்துள்ளார்.

  அதில் முதல்வர் மற்றும் துணை முதல்வரை ஆண்மையற்றவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த டிவிட்டுக்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

  நரிக்கு நாட்டாமை கிடைத்தால்

  ஆர்எஸ்எஸ் குருமூர்த்தி அவர்கள் ஈபிஎஸ்-ஓபிஎஸ் இருவரையும் ஆண்மையற்ற தலைமை என விமர்சித்திருக்கிறார்.
  ஓசியில் கிடைத்த அதிகாரத்திற்கே இந்த ஆட்டம் ஆடுகிறார் ஆடிட்டர்.
  நரிக்கு நாட்டாமை கொடுத்தால் இதுதான் கிடைக்கும்.

  கண்டிக்கதக்க வார்த்தை!

  மிகுந்த கண்டிக்கதக்க வார்த்தை! குருமூர்த்தி இப்படி பேசியது அவரின் அசிங்கமான வளர்ச்சியற்ற மூளையை காட்டுகிறது.

  ஆண்ட பரம்பரைக்கு..

  எடப்பாடியும் ஓபிஎஸ்சும் ஆண்மையற்றவர்கள் - குருமூர்த்தி ஆர்.எஸ்.எஸ்
  #என்னடா இது ஆண்ட பரம்பரைக்கு வந்த சோதனை

  கையறு நிலையில்..

  ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் ஆகியோரை ஆண்மையில்லாதவர்கள் என்ற ரீதியில் விமர்சித்துள்ளார் குருமூர்த்தி. இப்படி நெட்டிசன்கள் பேசியிருந்தால் இந்நேரம் கைது செய்யப்பட்டிருப்பார்கள். ஆனால் சொன்னது குருமூர்த்தி என்பதால் கையறு நிலையில் இருக்கிறார்கள் ஓ.பி.எஸ்சும், ஈ.பி.எஸ்சும்.

  குருமூர்த்தி மீது?

  முதலமைச்சரையே ஆண்மை அற்றவன் எனக் கூறும் குருமூர்த்தி மீது, கார்டூன் பாலா போல் நடவடிக்கை, இந்த குருப்பெயர்ச்சி மீது எடுக்கபடுமா?

  பேச கற்றுக்கொள்ள வேண்டும்

  குருமூர்த்தி நாகரிகமாக பேச கற்றுக்கொள்ள வேண்டும்.

  வேற என்ன பண்ண முடியும்

  எடப்பாடி பழனிசாமியும், பன்னிர்செல்வமும் ஆண்மையற்றவர்கள் - குருமூர்த்தி #
  கார்டூன் வரையுறவங்களை தான் கைது பண்ண முடியும் வேற என்ன பண்ண முடியும் தலைவரே..!
  (செல்லூர் ராஜூ வாய்ஸில் படிக்கவும்)

  2 பேருக்கும் சரியா போச்சு

  தமிழக முதல்வர் ஆண்மையற்றவர் என்று துக்ளக்- குருமூர்த்தி
  #நோட்டாவே ஜெயிக்க முடியல நீங்க.. ரெண்டு பேருக்கும் சரியா போச்சு

  பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

  English summary
  Auditor S Gurumurthy's Tweet on CM EPS and DCM OPS have attracted the anger of the ADMK cadres and others. They condemn him in social media. Here is a compilation of the reactions in the SM.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற