தேசிய கட்சியே பயப்படுவதுதான் ஆண்டவரின் வெற்றி.. தமிழிசையை வறுக்கும் வலைஞர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  Kamal Speech about his political move-Oneindia Tamil

  சென்னை: நடிகர் கமல்ஹாசனை கிண்டலடித்து வாழ்த்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். ஒரு நடிகரைக் கண்டு மிகப்பெரிய தேசிய கட்சியே நடுங்குது போல இது தான் கமலின் வெற்றி என்று தெறிக்கின்றனர் கருத்துகள்.

  நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 63வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ஆனால் இந்தப் பிறந்தநாளை மக்களுக்காக கொண்டாடுங்கள் என்று ரசிகர்களுக்கு அவர் கூறி இருந்தார். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நடிகர் கமல்ஹாசனுக்கு டுவிட்டரில் வித்தியாசமான வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

  இன்று மக்களுக்காக பிறந்தநாள் கொண்டாடுகிறவர்களின் முந்தைய பிறந்த நாட்கள் எல்லாம் மக்களை மறந்த நாட்களாகவே கொண்டாடப்பட்டன என்று தமிழிசை குறிப்பிட்டுள்ளார். என் பிறந்தநாள் வாழ்த்துகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  பிஜேபிக்கே எல்லா பெருமையும்

  தமிழிசையின் இந்த பிறந்தநாள் வாழ்த்து வந்த சில நிமிடங்களில் டுவிட்டரில் நெட்டிசன்கள் பதில் கருத்து புகுந்து விளையாட ஆரம்பித்துவிட்டனர். இதுக்கு பேர் தான் வயித்தெரிச்சல்.. இப்டியே உசுப்பேத்தி உசுப்பேத்தி கமல் சார அரசியலுக்கு வர வச்சுட்டீங்க. எல்லா பெருமையும் BJPக்கே என்று தட்டிவிட்டுள்ளார் இவர்.

  இது தான் கமலின் வெற்றி

  ஒரு நடிகரை கண்டு மிகப்பெரிய தேசிய கட்சியே நடுங்குது போல என்று பெருமையாக கேட்டுள்ளார் இந்த வலைபதிவர். தேசிய கட்சியே பயப்படுவது தான் தான் ஆண்டவரின் வெற்றி என்றும் அவர் கூறியுள்ளார்.

  ரஜினி செய்தால் பாராட்டுவீர்கள்

  எதற்கு எடுத்தாலும் குற்றமா. இதையே ரஜினி மக்களுக்காக கொண்டாடி இருந்தால் நீங்கள் வாழ்த்து சொல்லி இருப்பீர்கள் என்று வம்பிழுத்துள்ளார் இவர்.

  பதவிக்கு அழகல்ல

  இது வாழ்த்தாக தெரியவில்லையே வஞ்ச புகழ்ச்சி போல் உள்ளது. கருத்து முரண்களுக்கு அப்பார்பட்டு வாழ்த்துவதே மாண்பு. இது உங்கள் பதவிக்கு அழகல்ல என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் இவர்.

  தமிழிசைக்கு பதிலடி

  தமிழிசை சவுந்தரராஜன் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஒப்பிட்டு இந்த வலைபதிவர் கருத்து பதிவிட்டுள்ளார். தங்களின் பிறந்த நாளில் கேக் வழங்கிய நிகழ்ச்சி உலகப்புகழ் பெற்றது, உலக நாயகனுக்கு உங்களின் பிறந்த நாள் வாழ்த்தும் உலகப்புகழ் பெறும்

  நச் போட்டோவை போட்டு கேள்வி

  நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நலத்திட்ட உதவி வழங்கிய போது அருகில் தமிழிசை சவுந்தரராஜன் இருக்கும் பழைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இவர். அதோடு மாத்தி மாத்தி பேசுறது என்றும் ஒருகமெண்ட்டை போட்டுள்ளார் இவர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Netizens trolling Tamilisai soundarrajan for her birthday wishes to Actor Kamalhaasan and some interesting comments for her tweet post collections are here.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற