மிஸ்டர் தினகரன்.. நீங்க எப்ப கவுக்கறது.. நாங்க எப்ப பொழப்பைப் பார்க்கிறது.. நெட்டிசன்கள் குசும்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டிடிவி தினகரனின் ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பும் நகைப்புக்குரியதாகவே உருமாறிக் கொண்டிருக்கிறது. 2 நாட்களில் ஆட்சியை கவிழ்ப்போம் என கூறியவர் இப்போது அடுத்த ஒரு வாரத்தில் எடப்பாடி அரசு கவிழ்க்கப்படும் என புதிய சபதத்தை எடுத்திருக்கிறார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கான ஆதரவை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் வாபஸ் பெற்று ஒரு மாதமாகிவிட்டது. புதுவையில் 17 நாட்களும் கூர்க்கில் கடந்த ஒரு வாரமாகவும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் முகாமிட்டுள்ளனர்.

Netizens troll Dinakaran

வளைக்கும் எடப்பாடியார் தரப்பு

இந்த ஒரு மாத காலத்தில் தினகரன் தரப்பில் உள்ள 22 எம்.எல்.ஏக்களில் கம்பம் ஜக்கையனை வளைத்துவிட்டது எடப்பாடியார் தரப்பு. இதேபோல் தினகரன் முகாம் எம்.எல்.ஏக்களின் குடும்பத்தினரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது எடப்பாடியார் தரப்பு.

ஆடிப்போன தினகரன்

இதில் உச்சகட்டமாக கூர்க்குக்கு சென்று எம்.எல்.ஏக்களை மிரட்டிவிட்டும் வந்திருக்கிறது தமிழக போலீஸ். இதனால் தினகரன் தரப்பு ரொம்பவே ஆடிப் போயிருக்கிறது.

பயப்படுறியா குமாரு மொமெண்ட்

என்னதான் செய்தியாளர்கள் சந்திப்பில் தினகரன் ஆவேசமாக அல்லது நகைச்சுவையாக பேசினாலும், "பயப்படுறியா குமாரு" மொமெண்ட்தான் வெளிப்படுகிறது. போனமாதம் 2 நாட்களில் ஆட்சியை கவிழ்ப்பேன் என கூறத் தொடங்கினார் தினகரன்.

ஒருமாதம் கழித்து இன்னும் 1 வாரத்தில் ஆட்சி கவிழ்க்கப்படும் என ரொம்பவே "முன்னே....றியிருக்கிறார்" தினகரன். இதனால்தான் நெட்டிசன்கள், மிஸ்டர் தினகரன் சார்! இதென்ன எப்ப சார் கடையை திறப்பீங்க கதையாக இருக்கே... நீங்க எப்ப கவுக்கறது.. நாங்க எப்ப பொழப்பைப் பார்க்கிறது...என வறுத்து தொங்க விடுகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens in Social Medias now troll TTV Dinakaran for his Press meet statements on to Topple the Edappadi Palanisamy Govt.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற