பாஜக ஜெயிச்சிடுச்சு.. தமிழ்நாட்டுக்கு தண்ணி வந்துடும்.. தமிழிசை உறுதி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் பாஜக வெற்றியால் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து சரியாக தண்ணீர் கிடைக்கும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது . மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து உள்ளது.இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலேயே பாஜக பல தொகுதிகளில் முன்னிலை வகித்தது.

இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 120 இடங்களில் பாஜக கட்சியே முன்னிலை வகிக்கிறது. அதற்கு அடுத்த இடத்தை 60+ இடங்களுடன் காங்கிரஸ் பெற்றுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது.

மகிழ்ச்சியில் தமிழிசை

மகிழ்ச்சியில் தமிழிசை

இந்த நிலையில் பாஜகவின் வெற்றி உறுதியாகி உள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பாஜகவின் வெற்றி குறித்து பேட்டி அளித்துள்ளார்.

நன்மை கிடைக்குமாம்

நன்மை கிடைக்குமாம்

கர்நாடகாவில் பாஜக வெற்றியால் தமிழகத்திற்கு நன்மை கிடைக்கும். எடியூரப்பா தலைமையிலான அரசு தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கும் காவிரி பிரச்சனை இனி இரண்டு மாநிலத்திற்கும் இடையில் இருக்காது.

மோடிக்கே சமர்ப்பணம்

மோடிக்கே சமர்ப்பணம்

பிரதமர் மோடிக்கு இந்த வெற்றி சமர்ப்பணம். காங்கிரஸ் எவ்வளவுதான் பிரித்தாளும் சூழ்ச்சி செய்தாலும் ஆளும் மாநிலத்தை இழந்துள்ளார்கள். ஆட்சி செய்த மாநிலத்தை இழந்த காங்கிரஸ், இனி வேறு எங்கும் ஆட்சியமைக்க முடியாது.

தவிடுபொடியாக்கிய பாஜக

தவிடுபொடியாக்கிய பாஜக

கர்நாடகாவில் ராகுல்காந்தியின் பரப்புரை எடுபடவில்லை. கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி தனிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியமைக்கிறது. பாஜகவிற்கு வாக்களித்த அனைத்து கன்னட மக்களுக்கும் நன்றி, என்று கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
New BJP government will give Cauvery to TN says, Tamilisai Soudararajan after BJP's mass victory in Karnataka.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற