For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிலிண்டருக்குப் பதில் ரூ.200-க்கு புது சிலிண்டர்!

Google Oneindia Tamil News

சென்னை: வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட சிலிண்டருக்கு பதிலாக, வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.200-க்கு சிலிண்டர் வழங்கப்படும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு இழந்துபோன எரிவாயு ஆவணங்களுக்கு மாற்று ஆவணங்கள் தருவதற்காக தற்காலிக மையங்கள் அமைக்கப்படும்.

New Cylinder will be issued for Rs.200 to BPL people : Pon.Radhakrishnan

அதில் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு ஒரு சிலிண்டர் ரூ.200-க்கும், மற்றவர்களுக்கு ரூ.1200-க்கும் வழங்கலாம் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இதற்காக அனைத்து எண்ணெய் நிறுவன அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பப் பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இந்நிலையில் தொடர் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஆவணங்களின் நகல் வழங்க சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் நடைபெற்ற முகாமில் மட்டும் 200 பேருக்கு மேற்பட்டோர் கணக்குப்புத்தகம், சிலிண்டர் இணைப்புக்கான ஆவணச்சான்று ஆகியவற்றின் நகல்களையும், மாற்றுச் சிலிண்டரும் கேட்டு மனு அளித்துள்ளனர்.

English summary
Union Minister Pon.radhakrishnan said ina statement New cylinders will be issued to BPL families in flood affected districts
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X