For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நியூஜெர்சியில் தூத்துக்குடி படுகொலையை கண்டித்து தமிழர்கள் போராட்டம்

தூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்து நியூஜெர்சியில் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.

By Mathi
Google Oneindia Tamil News

நியூஜெர்சி: 13 பேரை காவு கொண்ட தூத்துக்குடி படுகொலையைக் கண்டித்து நியூஜெர்சியில் தமிழர்கள் கண்டனப் போராட்டம் நடத்தினர்.

நியூஜெர்சி அலேன் சாலையில் உள்ள மொய் விருந்து பண்ணையில் தூத்துக்குடியில் நடைப்பெற்ற படுகொலைகளை கண்டித்து ஆர்ப்பாட்டமும், அடையாள பேரணியும், உயிரிழந்த 13 பேருக்கு அஞ்சலியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இன உணர்வுடன் நியூஜெர்சி வாழ் தமிழர்கள் கலந்து கொண்டர்.

New Jersey Tamils condemns Tuticorin Firings

நியூஜெர்சி தமிழ்ச்சங்கத்தின் தலைவர் கல்யாண், நியூ ஜெர்சி துணைத் தலைவர் செந்தில்நாதன், ராஜா இளங்கோவன், முனைவர் கண்ணபிரான், மருத்துவர் சோம இளங்கோவன்,
வழக்கறிஞர் கனிமொழி மற்றும் பலர் தங்கள் கருத்துகளை வந்திருந்த உணர்வாளர்களுடன் பகிர்ந்துக் கொண்டனர்.

அதில் பலரும் தங்கள் சார்ப்பாக துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை வன்மையாக கண்டித்தோடு, மத்திய மாநில அரசுகளின் போக்கை கண்டித்தனர்.

பலரும் இயற்கை வளங்களை காப்பது பற்றி மக்களிடம் விழிப்புணர்வை எற்படுத்த வேண்டும் என்றும் மாசு விளைவிக்கும் ஆலைகள் எவை, திட்டங்கள் எவை, அதன் காரணமாக நாம் இழக்கும் வளங்கள் எவை பற்றிய விழிப்புணர்வும் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதை பற்றியும் தங்கள் கருத்துகளை பகிர்ந்தனர்.

தந்தை பெரியார், அம்பேத்கர் அவர்கள் துவக்கிய அறிவியக்கத்தின் வழியில் மக்களை பயணிக்க செய்யவேண்டும், அதுபோல் சிலர் திட்டங்கள் நல்லவையே ஆனால் சட்ட விதி முறைகளுக்குள் செயல்படாமல் இப்படி மக்களுக்கு சுகாதார சீர்க்கேட்டை ஏற்படுத்துவதை பற்றி அரசுகள் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் என்ற கருத்தினையும் முன் வைத்தனர்.

பிறகு அரசின் படுகொலைகளை கண்டித்தும் முழக்கங்கள் முழங்கி, அடையாளப் பேரணி நடத்தப்பட்டது. இறுதியாக மெழுவர்த்தி ஏந்தி வீரமரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி செல்லுத்தப்பட்டது.

English summary
US New Jersey Tamils had condemned and hold protest over Tuticoring Firings.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X