For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிவர், புரேவி வெள்ளச் சேதங்கள்... வேலூர்,புதுச்சேரியில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு

தமிழகத்தில் புயல் மற்றும் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் கடந்த இரண்டு நாட்களாக ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

வேலூர்/ புதுச்சேரி: வேலூர் மாவட்டத்தில் நிவர் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினர் இன்று ஆய்வு செய்கின்றனர். பொதுப்பணித்துறை செயலர் மணிவாசன் தலைமையிலான மத்தியக்குழு ஆய்வு செய்து வருகிறது. புதுச்சேரியில் நிவர் புயல், வெள்ள சேதங்களை அசுதோஷ் தலைமையிலான மத்திய குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.

தமிழகத்தில் நவம்பர் மாதம் நிவர் புயலும் டிசம்பர் மாதத்தில் புரேவி புயலும் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. புயல் வெள்ள சேதங்களைப் பற்றி ஆய்வு செய்ய மத்திய குழுவினர் தமிழகம் வந்துள்ளனர்.

Nivar and Burevi Cyclone flood damage Central team inspects Vellore, Puducherry

இந்த குழுவில் ஹைதராபாத்தில் உள்ள மத்திய வேளாண்துறை எண்ணெய் வித்துகள் வளர்ச்சி இயக்குனர் மனோகரன், மத்திய சாலை போக்குவரத்துத்துறை மண்டல அதிகாரி ரணன் ஜெய்சிங், டெல்லியில் உள்ள மத்திய நிதித்துறை இயக்குனர் பர்தெண்டு குமார், மத்திய மின்சார குழும துணை இயக்குனர் ஓ.பி.சுமன், மத்திய ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் தர்மவீர் ஜா, மத்திய மீன்வள மேம்பாட்டு ஆணையர் பால்பாண்டியன், சென்னையில் உள்ள மத்திய நீர் ஆணைய கண்காணிப்பு இயக்குனர் ஜெ.ஹர்ஷா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு கூறியுள்ளது.மாநில அமைச்சர்கள் இப்பணியினை மேற்கொண்டு வருவதாகவும், தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நோய் தடுப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக நடமாடும் மருத்துவக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

Nivar and Burevi Cyclone flood damage Central team inspects Vellore, Puducherry

மத்திய குழுவினர் நேற்று 2 குழுக்களாக பிரிந்து நேற்று ஆய்வை நடத்தினர். உள்துறை இணைச் செயலர் திரு அஷுதோஷ் அக்னிஹோத்ரி தலைமையிலான இந்தக் குழுவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.

மத்திய குழுவினர் நேற்று 2 குழுக்களாக பிரிந்து நேற்று ஆய்வை நடத்தினர். செங்கல்பட்டு மாவட்டம் பள்ளிக்கரணை மற்றும் செம்மஞ்சேரி பகுதிகளில் பாதிப்புகளை இக்குழுவினர் ஆய்வு செய்தனர். சென்னை, திருவள்ளுர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.

Nivar and Burevi Cyclone flood damage Central team inspects Vellore, Puducherry

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் நிவர் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினர் இன்று ஆய்வு செய்கின்றனர். பொதுப்பணித்துறை செயலர் மணிவாசன் தலைமையிலான மத்தியக்குழு ஆய்வு செய்து வருகிறது.

புதுச்சேரியில் நிவர் புயல், வெள்ள சேதங்களை அசுதோஷ் தலைமையிலான மத்திய குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.
ஆய்வுக்குப்பிறகு புதுச்சேரி தலைமை செயலகத்தில் முதலமைச்சர் நாராயணசாமியுடன் மத்திய குழு ஆலோசனை செய்கிறது.

English summary
The Central Committee today inspected the damage caused by the Nivar cyclone in Vellore district. The Central Committee headed by Public Works Secretary Manivasan is conducting the study. Ashutosh led central team inspects Nivar cyclone and flood damage in Pondicherry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X