தீ விபத்தில் உயிரிழப்பு ஏதும் இல்லை: தேனி கலெக்டர் தகவல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி தீ விபத்தில் யாரும் உயிரிழந்ததாக தகவல் இல்லை என்று மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியது:

குரங்கணி மலைப் பகுதியில் காட்டுத் தீயில் சிக்கி தவித்த 15 பேர் மீட்கப்பட்டு மீட்கப்பட்ட 15 பேருக்கும் போடி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை உயிரிழப்பு எதுவும் தெரியவில்லை.

No confirmed reports on loss of life in Theni Forest Fire

கோவை, திருப்பூர் மற்றும் ஈரோட்டை சேர்ந்த 12 பேர் மாணவ, மாணவிகளும், 3 குழந்தைகள் உட்பட 24 பேர் சென்னையை சேர்ந்த ட்ரெக்கர்களாகும். ட்ரெக்கிங் கிளப்பை சேர்ந்தவர்கள் அவர்கள்.

மீட்பு குழு, மருத்துவ குழு அனைவரும் குவிந்துள்ளனர். தற்போது 13 ஆம்புலன்ஸ்கள், மற்றும் 6 மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர். மலையில் உள்ளவர்களுக்கு மருத்துவ உதவி வழங்க ஒரு குழு மலையில் ஏறி வருகிறது. இவ்வாறு கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்தார்.

இதனிடையே, குரங்கணி மலையில் காட்டுத்தீயில் சிக்கியவர்களில் 10பேருக்கு கடுமையான தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இரவு நேரம் என்பதால் 10 பேரையும் மீட்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவுகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் சீனிவாசன் சந்தித்து ஆறுதல் கூறினர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
No confirmed reports on loss of life in Theni Forest Fire says, Theni district collector.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற