For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எங்களது வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது: செங்கோட்டையன்

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எங்களின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மை பலத்தை இன்று சட்டசபையில் நிரூபிக்க உள்ளது. இதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று சட்டசபையில் நடைபெறுகிறது.

No one can stop our success, said Sengottaiyan

எடப்பாடி பழனிச்சாமிக்கு 124 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளதாக ஆளுநரிடம் அளித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு 10 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது. இதனிடையே மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நடராஜ் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதனிடையே அதிமுகவின் கொள்கை எதிராக செயல்பட்டதால் சசிகலா அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மதுசூதனன் அறிவித்துள்ளார். மேலும் திண்டுக்கல் சீனிவாசன், வி.பி.கலைராஜன், டாக்டர் விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, தங்கத் தமிழ்செல்வன் உள்ளிட்ட 13 பேர் நீக்கப்படுவதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கூவத்துாரில் செங்கோட்டையன் அளித்த பேட்டியில் கூறுகையில், சசிகலாவால் கட்சியை விட்டு நீக்கப்பட்ட மதுசூதனன் பிறரை கட்சியை விட்டு நீக்குவது வேடிக்கையாக உள்ளது. கட்சி விதிப்படி யாரையும் கட்சியை விட்டு நீக்க அதிமுக அவைத்தலைவருக்கு அதிகாரம் இல்லை எனக் கூறினார்.

மேலும் முதல்வர் எடைப்பாடி பழனிச்சாமிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு உள்ளது. சட்டசபையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எங்களின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்றார்.

English summary
School education minister K A Sengottaiyan has said, No one can stop our success in assembly
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X