டிடிவி தினகரனின் திருச்சி பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி உழவர் சந்தையில் டிடிவி தினகரன் வரும் 16-ஆம் தேதி நடத்துவதாக இருந்த பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

நீட் தேர்வு அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவ சேர்க்கை நடைபெற்று வருகிறது. நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய அனிதா என்ற மாணவி கடந்த 1-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

No permission for TTV Dinakaran to organise public meeting in Trichy

எடப்பாடி அரசுக்கு குடைச்சல் ஏற்படுத்தும் வகையில் நீட் தேர்வுக்கு எதிராக செப்டம்பர் 9-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். உச்ச நீதிமன்றம் நீட் தேர்விற்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் நடத்த தடை விதித்தது.

இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து இந்த போராட்டம் ரத்து செய்யப்படுவதாகவும் தினகரன் கூறினார். இந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக வரும் 16-ஆம் தேதி திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் அந்த தேதியில் அதே இடத்தில் வேறு ஒரு அமைப்பினர் போராட்டம் நடத்தவுள்ளதால் டிடிவி தினகரன் நடத்தும் போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
As another organisation going to conduct meeting in Trichy Uzhavar Sandhai, Police refused to give permission to TTV Dinakaran to organise pulic meeting for Neet

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற