சென்னையில் மழை எப்படி இருக்கும்? என்ன சொல்கிறது நார்வே வானிலை மையம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சென்னையில் மழை எப்படி இருக்கும்? என்ன சொல்கிறது நார்வே வானிலை மையம்?- வீடியோ

  சென்னை :வரும் செவ்வாய்க்கிழமை வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக நார்வே வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. தொடங்கியது முதலே வெளுத்து வாங்கிய மழை தற்போது தீவிரமடைந்துள்ளது.

  இதனால் தமிழகம் முழுவதும் மக்களை மகிழ்விக்கும் வகையில் நல்ல மழை பெய்து வருகிறது. பல இடங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

  இன்று தலைக்காட்டும் வெயில்

  இன்று தலைக்காட்டும் வெயில்

  சென்னையில் நேற்று முழுவதும் இடைவிடாமல் பெய்த மழை இன்று சற்று ஓய்ந்துள்ளது. காலை முதல் வெயில் தலைக்காட்டுகிறது.

  நவ.4 வரை மழை

  நவ.4 வரை மழை

  அதேநேரத்தில் குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவம்பர் 4ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

  என்ன சொல்கிறது நார்வே?

  என்ன சொல்கிறது நார்வே?

  ஆனால் நார்வே வானிலை மையமோ வரும் செவ்வாய்க்கிழமை வரை சென்னையில் மழை நீடிக்கும் என தெரிவித்துள்ளது. கனமழை பெய்யக்கூடும் என்றும் நார்வே வானிலை மையம் கூறியுள்ளது.

  3 நாள் மழை இருக்காது

  3 நாள் மழை இருக்காது

  அவ்வப்போது குளிர்ந்த காற்று வீசும் என்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நார்வே வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் வரும் 8 ஆம் தேதி புதன்கிழமை முதல் 10ஆம் தேதி வெள்ளிக் கிழமை வரை மழைக்கு வாய்ப்பில்லை என்றும் மேகமூட்டம் வேண்டுமானால் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  துல்லியமாக கணித்த நார்வே

  துல்லியமாக கணித்த நார்வே

  கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் பெய்த வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளப்பெருக்கை நார்வே வானிலை மையம் முன்கூட்டியே துல்லியமாக கணித்திருந்தது. அதேபோல் இந்த ஆண்டும் கணித்துள்ளது.

  பொருத்திருந்து பார்ப்போம்

  பொருத்திருந்து பார்ப்போம்

  அதன்படி இந்த வாரத்தில் சென்னையில் மழை குறைந்தே காணப்படும் என கூறியுள்ளது. பொருந்திருந்துப் பார்ப்போம் இந்த ஆண்டும் நார்வே வானிலை மைய கணிப்பு மெய்யாகிறதா என்று..

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Norway government Meteorological site yr.no said rain will continue in Chennai till 7th of this month. after that it will take 3 days break.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற