பாஜவை அமெரிக்கா உளவு பார்த்ததற்கு ராகுல் காந்தி தான் காரணமா?
சென்னை: பாஜகவை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஏஜென்சி கண்காணித்ததற்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தான் காரணம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
நாட்டின் பாதுகாப்புக்கு லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளால் ஏற்படும் அச்சுறுத்தலை விட எதிர்கட்சியால் அதுவும் குறிப்பிட்ட எதிர்கட்சி தலைவர் நரேந்திர மோடியால் தான் அச்சுறுத்தல் அதிகம் என்று காங்கிரஸ் துணை தலவர் ராகுல் காந்தி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க தூதரிடம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஏஜென்சி(என்.எஸ்.ஏ.) பாஜகவை உளவு பார்த்தது என்று அண்மையில் வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டிருந்தது.

ராகுல்
2009ம் ஆண்டு ஜூலை மாதம் 20ம் தேதி காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி அமெரிக்க தூதரிடம் நாட்டுக்கு லக்ஷ்கர் இ தொய்பாவை விட பாஜக தான் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று கூறியதாக விக்கிலீ்க்ஸ் தெரிவித்துள்ளது.

தீவிரவாதிகள்
லக்ஷ்கர் இ தொய்பாவால் இந்தியாவுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் பற்றி அமெரிக்க தூதர் ராகுல் காந்தியிடம் கேட்டுள்ளார். அதற்கு ராகுல் கூறுகையில், இந்தியாவில் உள்ள சில முஸ்லீம் சமூகம் அந்த அமைப்புக்கு ஆதரவு அளிப்பதற்கான ஆதரங்கள் உள்ளன என்றார்.

இந்து அமைப்புகள்
இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுதல் இந்து அமைப்புகளின் வளர்ச்சி தான். அவை தான் முஸ்லீம்களுடன் மத பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன என்று ராகுல் கூறியுள்ளார்.( ராகுல் மோடி உள்ளிட்ட சில பாஜக தலைவர்களால் ஏற்பட்ட பிரச்சனைகளை தான் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்) இந்த தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

தாக்குதல்கள்
2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி மும்பையில் லக்ஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 164 பேர் பலியாகினர், 308 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நடந்த சில மாதங்களில் தான் லஷ்கர் இ தொய்பாவை விட இந்து அமைப்புகளால் தான் அச்சுறுத்தல் அதிகம் என்று ராகுல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்காணிப்பு
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஏஜென்சி பாஜகவை கண்காணித்து வந்ததற்கு ராகுல் காந்தி கூறிய இந்த பதில் தான் காரணமோ என்று பேச்சு அடிபடுகிறது.