மதுரையில் விழிப்புணர்வு பேரணி நடத்த முயன்ற ஓ.பி.எஸ் ஆதரவாளர் கைது! அடக்குமுறை ஆரம்பம்?
மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், முன்னாள் கவுன்சிலரும், முன்னாள் மண்டல தலைவருமான சாலை முத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: சசிகலா ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் தொகுதிகளில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் விழிப்புணர்வு பிரசாரத்தை இன்று ஆரம்பிப்பதாக அறிவித்த நிலையில் அவரது ஆதரவாளர்களை போலீசார் கைது செய்ய தொடங்கியுள்ளனர்.
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு நேற்று இரவு 7.45 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் இ.மதுசூதனன், கே.பி.முனுசாமி, முன்னாள் பேரவைத் தலைவர் பி.எச்.பாண்டியன் உள்ளிட்டோர் சென்றனர்.

நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுக எம்எல்ஏக்கள் நியாயமான முடிவுகளை எடுக்க வலியுறுத்தும் வகையில், அவர்கள் சார்ந்திருக்கும் தொகுதிகளில் பேரணி, ஊர்வலம் நடைபெறும் என்றார்.
நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் இன்று ஒருநாள்தான் விழிப்புணர்வு பேரணி நடத்த கால அவகாசம் கிடைத்துள்ளது. ஆனால் அதை காவல்துறை துணை கொண்டு தடுக்க ஆரம்பித்துள்ளது தமிழக அரசு.
மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், முன்னாள் கவுன்சிலரும், முன்னாள் மண்டல தலைவருமான சாலை முத்து கைது செய்யப்பட்டுள்ளார். ஓ.பி.எஸ். அணி சார்பில் வாக்காளர் அணிவகுப்பு நடத்தப்படும் என்று அறிவித்ததை அடுத்து முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக முத்துவை ஆண்டாள்துறை பகுதி காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்று தெரிகிறது.
நேற்று மாலையிலேயே ஓ.பி.எஸ் வீடு மற்றும் தேனி மாவட்டத்திலுள்ள அலுவலகங்கள் தாக்கப்பட்டன. தமிழகம் முழுக்க ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கு காவல்துறை மூலமும், தனிப்பட்ட விஷமிகளின் தாக்குதல் மூலமும் நெருக்கடி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications