அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெறும் இடத்தை சுற்றி போலீஸ் பாதுகாப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
அதிமுக-விலிருந்து சிகலா, தினகரன் நீக்கம்?-வீடியோ

சென்னை: பல்வேறு தடைகளுக்கு மத்தியில் இன்று கூடவுள்ள அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெறும் இடத்தை சுற்றி ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று பொதுக் குழு கூட்டம் கூடுகிறது. இதில் சசிகலா, தினகரன் நீக்கம் உள்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது. டிடிவி தினகரன் சார்பில் இந்த பொதுக் குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க கோரியும் சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

On the account of ADMK's General council meeting, Police force gathered

மாறாக வழக்கை தொடர்ந்த எம்எல்ஏ வெற்றிவேலுக்கு ரூ1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இந்நிலையில் தடை விதிக்க முடியாது என்ற உத்தரவை எதிர்த்து மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதிலும் தினகரன் அணியினருக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் எடப்பாடி தலைமையில் கூட்டம் நடக்க எவ்வித தடையும் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்துவிட்டனர். இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் இன்று வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் பொதுக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் கூடுகிறது.

இதனால் அசம்பாவிதங்களை தடுக்க மண்டபத்தை சுற்றி ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுக் குழு, செயற்குழு கூட்டத்துக்கான அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
ADMK's General Council Meeting to be held today. Police force gathered in the venue. Each and every member is getting inside after checking.
Please Wait while comments are loading...