மழையால் சில சமயம் அவதிதான்.. ஆனால் அதை மகிழ்ச்சி விழுங்கிவிடும்.. வரவேற்கும் வாசகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை கொட்டித் தீர்க்கும் கனமழையால் சிரமம் ஏற்பட்டாலும் அதனை மக்கள் இன்முகத்தோடு வரவேற்றுள்ளனர்.

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் அதிகாலை முதலே கொட்டித் தீர்க்கும் மழையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

ஆனாலும் மக்கள் மழைக்கு பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மழை குறித்து ஒன் இந்தியா வாசகர்கள் பகிர்ந்துள்ள கருத்துக்கள் இதோ..

கேப்பும் கிடைக்கல

கேப்பும் கிடைக்கல

Harish prabhakaran: அட மணி 12 ஆகுது.. பைக்கும் எடுக்க முடியல.. கேப்பும் கிடைக்கல.. பேசாம ஆஃபீஸ்க்கு லீவு போட்டு தூங்க போறேன்...

ரொம்ப மகிழ்ச்சி

ரொம்ப மகிழ்ச்சி

Moni: என் ஊர் நாகர்கோவில் ஞாபகம் வந்தது.. ரொம்ப மகிழ்ச்சி..

மகிழ்ச்சி விழுங்கிவிடும்

மகிழ்ச்சி விழுங்கிவிடும்

Guru: சில சமயம் அவதிதான் ஆனால் அதை மகிழ்ச்சி விழுங்கிவிடும்...

கை ஏந்துவதாவது குறையுமே

கை ஏந்துவதாவது குறையுமே

Melkey: இந்த முறையாவது மழை நீரை சேர்த்து வைக்குமா தமிழக அரசு, குறைந்தது அண்டை மாநிலங்களிடம் கை ஏந்துவதாவது குறையுமே.தண்ணியால் பட்ட கஷ்டம் மழையால் வருவதில்லை

பெய்துகொண்டே இருக்கட்டும்

பெய்துகொண்டே இருக்கட்டும்

Rassy Camren: மழையால் எனக்கு மகிழ்ச்சியே.. ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் எனக்குள் ஆனந்தம். மண்ணின் வளம் அதிகமாகும். எங்கேயோ கண் காணாது போய்விட்ட நிலத்தடி நீர்மட்டம் உயரும். என் வீட்டு பின்புறம் நட்ட மரங்கள் கடந்த மழை சீசனில் .. வேகமாக தள தளவென்று வளர்ந்து நிற்பதைக் காணும் போது ஏற்படும் ஆனந்தம் எதிலும் வராது. பெய்யட்டும் மழை.. பெய்துகொண்டே இருக்கட்டும்.

என்ஜாயிங்..

என்ஜாயிங்..

Moni: கண்டிப்பா என்ஜாய் தான் பண்றோம்..

சாலைகளை பார்த்தால்தான்

சாலைகளை பார்த்தால்தான்

Divakar Anand:ஆம் வட கிழக்கு பருவமழையால் மகிழ்ச்சியே...!

ஆனால் தரமற்ற குண்டும் குழியுமாக சாலைகளை பார்த்தால்தான் பயமாக இருக்கிறது..

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Here the Oneindia Tamil Readers experience with the North-East Monsoon.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற