தினகரன் கெடு முடிவு... அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ் திடீர் அழைப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நிர்வாகிகள் சென்னைக்கு உடனடியாக கிளம்பி வருமாறு அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் தலைவர் ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

இரு அணிகளையும் இணைக்க 60 நாட்கள் கெடு விதித்தார் டிடிவி தினகரன். அந்த கெடு இன்றோடு முடிவடைந்து விட்டது. கட்சிப்பணியை கையில் எடுக்கப் போவதாக கூறினார் தினகரன்.

OPS Calls ADMK Purachi Talaivi Amma workers to Chennai

ஓபிஎஸ் அணி நிர்வாகிகளும், ஈபிஎஸ் அணி நிர்வாகிகளும் ரகசிய பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறினாலும் பகிரங்கமாக இருவரும் குற்றம் சாட்டிக்கொள்கின்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி அரசை ஊழல் ஆட்சி என்று மக்கள் கருதுவதாக ஒபிஎஸ் கூறவே, கொதித்து எழுந்த அமைச்சர் சண்முகம், ஊழல் செய்தது ஒபிஎஸ்தான் என்றார். மருத்துவ காப்பீடு திட்டத்தில் ஊழல், மணல் கொள்ளைக்காரர்களோடு கூட்டு என்று குற்றச்சாட்டை அடுக்கினார் ஓபிஎஸ்.

இந்த சூழ்நிலையில்தான் ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக ஆகஸ்ட் 10ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்பாட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளார். அதற்கு முன்னதாக நிர்வாகிகளை சந்தித்து பேசப்போகிறார் ஓபிஎஸ்.

ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணையவே இணையாது என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ் செல்வன் டிடிவி தினகரன் கூறியுள்ளார். அணிகள் இணைய தினகரன் விதித்த கெடுவும் இன்றோடு முடிகிறது.

Vote Of Confidence, OPS Says 'Dharmam' will win- Oneindia Tamil

இந்த சூழ்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள நிர்வாகிகள் நாளை சென்னைக்கு வரவேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்துள்ளார். ஓபிஎஸ் விடுத்துள்ள அழைப்பு புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
As tension prevails in ADMK Purachi Talaivi Amma camp, former cm OPS has called his party leaders to Chennai for dicussion.
Please Wait while comments are loading...