
சென்னை: ஓ.பி.எஸ் செய்வதற்கு பெயர்தான் குடும்ப ஆட்சி என டிடிவி. தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார். மேலும் ஓபிஎஸ் யாருக்கோ விசுவாசமாக இருக்க முயல்கிறார் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
சட்டசபையில் இன்று காரசாரமாக விவாதங்கள் நடந்தது. இதில் ஓபிஎஸ் மற்றும் தங்கமணி ஆகியோர் தினகரனிடம் நீண்ட நேரம் விவாதம் செய்தனர். இந்த விவாதம் 30 நிமிடத்திற்கும் மேலாக நீண்டு சென்றது.

தினகரன் தன் மீது வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டிற்கும் பதிலளிக்க முயற்சி செய்தார். ஆனால் சபாநாயகர் அவரை பேச அனுமதி அளிக்கவில்லை. சபாநாயகர் பேச அனுமதி அளிக்காத காரணத்தால் தினகரன் வெளிநடப்பு செய்தார்.
வெளியில் வந்த தினகரன் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ''நான் குடும்ப அரசியல் செய்ய முயற்சிப்பதாக ஓ.பி.எஸ் கூறுகிறார். நான் குடும்ப அரசியல் செய்யவில்லை. ஓ.பி.எஸ் தான் குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டு இருக்கிறார்'' என்று குறிப்பிட்டார்.
இது குறித்து மேலும் பேசிய அவர் ''ஓ.பி.எஸ் சம்பந்திதான் தற்போது தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞர். அதற்கு பெயர் என்ன. அவர் தான் குடும்ப அரசியல் நடத்துகிறார். இப்போது யாருக்கோ விசுவாசமாக இருக்க ஆசைப்பட்டு எங்களை எதிர்க்கிறார்'' என்று குறிப்பிட்டு உள்ளார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!