அடடா திமுக.. அடேங்கப்பா அதிமுக...ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டும்... சிரித்துக்கொண்டும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் 135 எம்எல்ஏக்களில் சபாநாயகர் நீங்கலாக 134 பேரில் எடடபபாடி பழனிச்சாமி அணி, ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி மொத்தம் 3 அணிகள் இருக்கிறார்கள். பகையாளிகள் போல வெளியே பேசிக்கொண்டாலும் நாங்க பங்காளிங்கதான்யா என்று அவ்வப்போது நிரூபிக்கின்றனர்.

தினகரன் அணியில் 30க்கும் மேற்பட்டவர்கள் இருப்பதாக கூறினாலும் எடப்பாடி முதல்வரின் கீழ் செயல்படும் எம்எல்ஏக்கள்தான். அதேபோல ஓபிஎஸ் அணியில் மொத்தம் 12 பேர் இருக்கின்றனர்.

3 அணி எம்எல்ஏக்கள்

3 அணி எம்எல்ஏக்கள்

3 அணிகளிடையே சட்டசபையில் மல்லுக்கட்ட வைக்கவேண்டும் என்று எதிர்கட்சியான திமுக முயற்சி செய்தாலும் இவர்கள் அனைவரும் ஜிஎஸ்டி மசோதாவிலேயே தங்களின் ஒற்றுமையை பறைசாற்றி விட்டனர்.

சட்டசபையில் ஒற்றுமை

சட்டசபையில் ஒற்றுமை

சட்டசபை கேண்டீனில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணி எம்எல்ஏக்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டும் சிரித்துக்கொண்டு பேசிக்கொண்டும் இருக்கிறார்களாம். இதை டிடிவி தினகரன் அணி எம்எல்ஏக்களும் நோட் செய்து கொண்டுதான் இருக்கிறார்களாம்.

எப்போதும் இணையலாம்

எப்போதும் இணையலாம்

பேச்சுவார்த்தை குழுவை கலைத்து விட்டதாக ஓபிஎஸ் கூறினாலும் ரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறதாம். எனவே இரு அணிகளும் எப்போது வேண்டுமானாலும் இணையலாம் என்கின்றனர்.

உதவி செய்த ஓபிஎஸ்

உதவி செய்த ஓபிஎஸ்

உணவு மானியக்கோரிக்கையின் போது, ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகளிடையே சண்டை மூட்டி விடலாம் என்று நினைத்து திமுக எம்எல்ஏக்கள் சில கருத்துக்களை பேசினாலும், அதை சட்டை செய்வதில்லையாம். உணவு மானியக்கோரிக்கையின் போது சட்டசபையில் அமைச்சர் காமராஜ்க்கு ஓபிஎஸ் கொடுத்த சில டிப்ஸே சாட்சி என்கின்றனர்.

கோவையில் ஓபிஎஸ்

கோவையில் ஓபிஎஸ்

அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் இணைப்பு ஆபரேசனை கையில் எடுத்துக்கிறார்களாம். கோவையில் மே இறுதியில் 2 நாட்கள் சிகிச்சைக்காக தங்கிய ஓபிஎஸ், இப்போது ஒருவார காலம் ஓய்விற்காக தங்கியுள்ளார். புத்துணர்வு சிகிச்சை என்று கூறினாலும் பேச்சுவார்த்தை டீல்களை இறுதி செய்யத்தானாம். எது எப்படியோ இரு அணிகளும் இணைந்து அதிமுகவையும், இரட்டை இலையையும் மீட்டெடுத்தால் சரிதான்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
ADMK amma team MLAs conversed with ADMK Purachi Talaivi team MLAs with jovially in the assembly canteen.
Please Wait while comments are loading...