ஓபிஎஸ் டீம்...வேலைக்காகாது... தினகரன் அணியில் ஐக்கியமான பரிதி இளம்வழுதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா மறைந்த பிறகு முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வத்திற்கும், பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலாவிற்கும் இடையே மோதல் மூண்டது.

பின்னர் தன்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்ததாக புகார் கூறிய பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்படத் தொடங்கினார். அவரது அணியில் 12 சட்டமன்ற உறுப்பினர்கள், எம்பிக்கள், பல முன்னாள் முக்கிய நிர்வாகிகள் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

OPS team’s Parithi Ilamvazuthi joins hand with TTV Dinakaran

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்து செயல்பட்ட பரிதி இளம்வழுதி, தற்போது டி.டி.வி.தினகரன் அணிக்கு செல்வதாக கூறியுள்ளார். ஓபிஎஸ் நடிப்பை கண்டு ஏமாந்துவிட்டதாக காரணம் தெரிவித்துள்ளார் பரிதி. தினகரனை சந்திக்க பரிதி அவரது இல்லம் சென்றுள்ளார்.

திமுகவில் செய்தித்துறை அமைச்சராக, கருணாநிதியின் நம்பிக்கையைப் பெற்ற நபராக கூடவே இருந்த பரிதி பின்னர் திடீரென அதிமுகவில் ஜெயலலிதா முன்னிலையில் ஐக்கியமானார்.

எதிர்பார்த்த அரசியல் ஏற்றம் இல்லாத நிலையில் இப்போது ஓபிஎஸ் டீமில் இருந்து வெளியேறி தினகரன் அணியில் ஐக்கியமாகியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Parithi Ilamvazhuthi, former OPS supporter now joined in TTV Dinakaran Team.
Please Wait while comments are loading...