தவக்களை பேசினால் கூட ஓபிஎஸ் பதில் சொல்வார்: சி.வி.சண்முகம் நக்கல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கமல் பேசினால் மட்டுமல்ல தவக்களை பேசினால் கூட ஓபிஎஸ் பதில் சொல்வார் என அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைச்சர் சிவி சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கமலுக்கு ஆதரவாக ஓபிஎஸ் அணியினர் பேசியிருப்பது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

OPS will not speak only of Kamal but also speak of the frogs: CV Shanmugam

அதற்கு பதிலளித்த சிவி சண்முகம் கமல் பேசினால் மட்டுமல்ல தவக்களை பேசினால் கூட ஓபிஎஸ் பதில் சொல்வார் என நக்கலடித்தார். மேலும் நாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யார் போராடினாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவது குறித்து ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார். பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நேற்று முதல்வரை சந்தித்து பேரறிவாளன் பரோல் தொடர்பாக மனு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister CV Shanmugam said that OPS will not speak only of Kamal but also speak of the frogs. decision will be taken on the Perarivalan parole issue.
Please Wait while comments are loading...