பன்னீர்செல்வத்துடன் இருப்பவர்கள் காலாவதியான அரசியல்வாதிகள்... வைகைச்செல்வன் அதிரடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்திருப்பவர்கள் காலாவதியான அரசியல்வாதிகள் என அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் கூறியுள்ளார். பன்னீர்செல்வம் அதிமுக துரோகியாக மாறிவிட்டார் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுகவில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் தமிழக அரசியலில் அனல் பறந்து வருகிறது. சசிகலா ஆதரவு எம்எல்ஏக்களையும், நிர்வாகிகளையும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக மன்னார்குடி கும்பல் ஏவி வருகிறது.

Outdated politicians only supporting O.Panneerselvam : Vaigaiselvan

இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் அதிமுக செய்திதொடர்பாளர் வைகைச் செல்வன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பன்னீர்செல்வம் அதிமுகவுக்கு துரோகம் செய்துவிட்டதாக அவர் கூறினார்.

திமுகவின் தூண்டுதலின் பேரில் பன்னீர்செல்வம் அதிமுகவுக்கு துரோகியாக மாறிவிட்டார். திமுகவினர் ஆதரவு அளிப்பதிலேயே அவர்கள்தான் இதற்கு காரணம் என்றும் வைகைச் செல்வன் கூறினார்.

மேலும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து வருபவர்கள் எல்லாம் காலாவதியான அரசியல்வாதிகள் என்றும் அவர் குற்றம்சாட்டினார். வைகைச்செல்வனின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
ADMK Spokes person Vaigaiselvan says Outdated politicians only supporting O.Panneerselvam. He accused Panneerselvam turned traitor, to the AIADMK.
Please Wait while comments are loading...