For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாடுமுழுவதும் பன்றிக்காய்ச்சலுக்கு 1370 பேர் பலி; 25000 பேர் பாதிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் 51 பேர் பலியானதையடுத்து, நாடு முழுவதும் இந்த நோய்க்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,370 ஆக அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,370ஆக உயர்ந்துள்ளது. இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,190ஆக அதிகரித்துள்ளது.

Over 25,000 Test Positive for Swine Flu, 1370 Deaths So Far

குஜராத்தில் 322

குஜராத் மாநிலத்தில், பன்றிக்காய்ச்சலுக்கு அதிகபட்சமாக 322 பேர் பலியாகி உள்ளனர். அங்கு 5,521 பேர் இந்நோய்த் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர்.

ராஜஸ்தானில் அதிக பாதிப்பு

ராஜஸ்தானில் 5,949 பேரை இந்நோய் தாக்கியுள்ளது. அங்கு இதுவரை 321 பேர் பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில்

இதைப்போல மகாராஷ்டிராவில் 211பேரும், கர்நாடகத்தில் 55, தெலுங்கானாவில் 63 பேரும் உயிரிழந்துள்ளனர்.

காஷ்மீரில் 11, கேரளாவில் 9, ஹரியானாவில் 27, பஞ்சாபில் 47, உத்தரபிரதேசத்தில் 16, ஆந்திராவில் 15 பேர் என நாடு முழுவதும் பன்றி காய்ச்சலுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தீயாய் பரவும் பன்றிக் காய்ச்சல்... பதற வேண்டாம்: முன்னெச்சரிக்கையாக என்ன செய்யலாம்?தீயாய் பரவும் பன்றிக் காய்ச்சல்... பதற வேண்டாம்: முன்னெச்சரிக்கையாக என்ன செய்யலாம்?

English summary
Swine flu deaths continued unabated as 51 more people died of the virus raising the toll to 1370 while the number of affected crossed the 25,000 mark on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X