ஜல்லிக்கட்டுப் போட்டியை வேடிக்கை பார்த்தவர் காளை முட்டி அநியாய பலி!- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நடைபெற்றுக்கொண்டிருந்த ஜல்ல்லிக்கட்டு போட்டியை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சின்னராஜூவை காளை முட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

கிருஷ்ணகிரி, பழையபேட்டையில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அதில் 200 காளைகள் பங்கேற்றன.

 Oxen hit youngster and he died in Krishnagiri

இந்த போட்டியைக் காண சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் வந்திருந்தனர். போட்டி நடைபெறும்போது அதை ஆவலாகப் பார்த்துக்கொண்டிருந்தார் சின்னராஜு என்ற இளைஞர். அப்போது அங்கு துள்ளிக்குதித்து ஓடிவந்த காளை ஒன்று அவர் மீது எதிர்பாராத விதமாக முட்டியது.

அதில் கொம்பு அவர் தொண்டையில் குத்திக் கிழித்ததில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். மேலும் பத்து பேர் படுகாயமடைந்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In krishnagiri a youngster watched jallikattu. An oxen hit him and he died thereitsel and 10 more people injured heavily.
Please Wait while comments are loading...