பொருளாதாரம் வளர்ச்சியடைந்தால் எதற்காக பூஸ்ட்? ப.சிதம்பரம் சரமாரி கேள்வி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பொருளாதாரம் வளர்ச்சியடைந்தால் எதற்காக மத்திய அரசு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை எடுக்கிறது என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுபு்பியுள்ளார்.

டிவிட்டரில் இதபற்றி அவர் கூறுகையில், பொருளாதாரம் நல்ல அடித்தளத்தோடு இருந்தால், 7.5 சதவீத விகிதத்தில் வளர்வதாக கூறுவது உண்மையாக இருந்தால், அதற்கு ஊக்கம் தேவைப்படாது.

P Chidambaram asks questions on economy slow down

பொருளாதாரத்திற்கான ஊக்கம் என்பது, அதன் வீழ்ச்சியை வெளிப்படையாக காட்டிவிட்டது. 2016 ஜனவரி-மார்ச் வரையிலான காலகட்டத்தில் 9.1, 7.9, 7.5, 7.0, 6.1 மற்றும் 5.7 சதவீதமாக இருந்தது. பொருளாதாரம் 7.5 என்ற அளவில் வளரவேயில்லை. 2016 ஏப்ரல் முதல் பொருளாதாரம் தடம் புரண்டு விட்டது.

இந்த சூழ்நிலை என்பது தொழில் தொடங்க ஏற்றதாக இல்லை அல்லது தொழிலை விரிவுசெய்ய ஏற்றதாக இல்லை என்பதே தொழில் முனைவோர் எண்ணமாக உள்ளது. சிறு தொழில் தேவைகளில் வெறும் 10 சதவீதத்தை மட்டுமே வங்கிகள் கடனாக கொடுக்கின்றன. வங்கிகளுக்கு மத்திய அரசு நிதி உதவி செய்துள்ளதால் பெரிய பலன் இருக்காது.

பணமதிப்பிழப்பு போன்ற சாகசங்களை இனியும் செய்ய மாட்டோம் என்று மத்திய அரசு அறிவித்திருக்க வேண்டும். இவ்வாறு சிதம்பரம் கூறியுள்ளார்.

வங்கிகளுக்கு 2.11 லட்சம் கோடியை சீரமைப்பு நிதியாக மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் சிதம்பரம் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
If the economy is on strong macroeconomic fundamentals and is growing at 7.5 per cent, it does not require a boost, asks P. Chidambaram.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற