For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீட் கிடையாது போப்பா.. கறார் இளங்கோவனால் கலங்கிப்போன சிதம்பரம் கோஷ்டி! அவசரமாக மீட்டிங்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் விருப்பமனு கொடுக்காதவர்களுக்கு ‘சீட்' கிடையாது என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியதை தொடர்ந்து அதிருப்தி அடைந்த ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் அவசரமாக கூடி ஆலோசனை நடத்தியுள்ளனர்.

சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் சார்பில், போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் மனுக்கள் பெறப்பட்டு, நேர்காணலும் முடிவடைந்துள்ளது. இதில் சிதம்பரம், தங்கபாலு போன்ற தலைவர்களின் ஆதரவாளர்கள் பங்கேற்கவில்லை.

இதனிடையே கட்சியின் மாநில தலைவர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களிடம் கூறுகையில், விருப்பமனு கொடுக்காதவர்கள், ஆய்வில் கலந்து கொள்ளாதவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படமாட்டாது. கோஷ்டி தலைவர்கள் ஆதரவாளர்களுக்கு கோட்டா முறையில் சீட்டுகள் தரப்படாது என்றார்.

சிதம்பரம் ஆதரவாளர்கள் அதிருப்தி

சிதம்பரம் ஆதரவாளர்கள் அதிருப்தி

இளங்கோவனை தலைவர் பதவியில் இருந்து நீக்கக்கோரி, ப.சிதம்பரம், தங்கபாலு ஆதரவாளர்கள் டெல்லி சென்று காங்கிரஸ் மேலிடத்தில் புகார் செய்தனர். இந்த நிலையில், விருப்பமனு கொடுக்காதவர்களுக்கு சீட் கிடையாது என்று இளங்கோவன் கூறியிருப்பது ப.சிதம்பரம், தங்கபாலு ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவசர கூட்டம்

அவசர கூட்டம்

இதையடுத்து ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் நேற்று சென்னையில் உள்ள ப.சிதம்பரம் இல்லத்தில் அவரது தலைமையில் அவசரமாக கூடினார்கள். முன்னாள் எம்.பி. அழகிரி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனிச்சாமி, சுந்தரம், கராத்தே தியாகராஜன் உள்பட 8 மாவட்ட தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

நாள் முழுவதும்

நாள் முழுவதும்

இந்த கூட்டம் காலை தொடங்கி மாலை வரை நீடித்தது. முதலில் அனைவரையும் மொத்தமாக சந்தித்து பேசிய ப.சிதம்பரம், பின்னர் தன்னுடைய ஆதரவாளர்களான மாவட்ட தலைவர்களிடம் தனித்தனியே பேசினார்.

அடுத்த மாதம்

அடுத்த மாதம்

இதுகுறித்து கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் சிலர் தெரிவிக்கையில், அடுத்தகட்டமாக ஆலோசனை நடத்த அடுத்த மாதம் 4ம் தேதி சென்னையில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்த இருக்கிறோம்.

முக்கிய முடிவுகள்

முக்கிய முடிவுகள்

இந்த கூட்டத்துக்கு ப.சிதம்பரம் ஒப்புதல் அளித்து இருக்கிறார். முன்னாள் மாநில தலைவர்கள் தங்கபாலு, கிருஷ்ணசாமியிடமும் பேசி இருக்கிறோம். அவர்களும் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன என்று தெரிவித்தனர்.

English summary
P.Chidambaram met with his supporters in Chennai and discussed about TN Congress chief Elangovan activities.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X