பள்ளியைத் தரம் உயர்த்தக் கோரி பெற்றோருடன் மாணவர்கள் போராட்டம் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

வேலூர்: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக் கோரி மாணவர்களும் பெற்றோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மவட்டத்தில் உள்ளது இராமாலை கிராமம். இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. பல கிராமங்களில் இருந்து வரும் மாணவர்கள் இந்தப் பள்ளியில் தான் படிக்கிறார்கள்.

ஆகவே, இப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தித் தர வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால், அதற்கு அதிகாரிகளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இராமாலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போராட்டத்தில் பெற்றோருடன் மாணவர்களும் சேர்ந்துகொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Parents and students of Iramalai municipal middle school demanded to promote the school as high school. with that demand they protested in front of the school.
Please Wait while comments are loading...