சிவாஜிய விட பெரிய நடிகருப்பா ஒ.பிஎஸ்...அணி தாவிய பரிதி இளம்வழுதி குமுறல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : ஓ.பன்னீர்செல்வம்சிவாஜிகணேசனை விட பெரிய நடிகர் இப்போதைய நிலைமையில் கட்சியை பலப்படுத்த தினகரன் தான் தேவை என்று அவருடைய அணிக்குத் தாவியுள்ள பரிதி இளம்வழுதி தெரிவித்துள்ளார்.

திமுகவின் அசைக்க முடியாத எழும்பூர் தொகுதி வேட்பாளராக இருந்தவர் பரிதி இளம்வழுதி. திமுக தலைவர் கருணாநிதி மட்டும் கட்சிக்கு வலதுகரமாகவும், முக்கிய அமைச்சராகவும் வலம் வந்த வந்தவர். திமுகவில் ஏற்பட்ட மனக்கசப்பால் கட்சியை விட்டு விலகி அதிமுகவில் மறைந்த ஜெயலலிதா முன்னிலையில் இணைந்தார்.

 Parithi Ilamvazhuthi says O.Paneerselvam is a good actor rather politician

ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் அதிமுகவில் கோஷ்டி பிரச்னை ஏற்பட்டு அதிமுக அம்மா அணி, அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி என பிரிந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் அணியில் ஐக்கியமானார் பரிதி இளம்வழுதி. இந்நிலையில், இன்று பன்னீர் செல்வத்தின் அணியில் இருந்து டி.டி.வி.தினகரனின் அணி பக்கம் வந்துள்ளார் பரிதி.

திடீரனெ அணி மாறியது ஏன் என்று பரிதி இளம்வழுதி தரப்பில் கேட்டதற்கு அதிரி புதிரி பதிலைத் தந்துள்ளார் அவர். ஓ.பன்னீர் செல்வத்தின் நடிப்பை பார்த்து ஏமாந்துவிட்டேன். சிவாஜி கணேசனைவிட பெரிய நடிகரா ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார்.

தற்போதைய சூழலில் அ.தி.மு.கவை வலுப்படுத்த சரியான தலைவர் டி.டி.வி.தினகரன்தான். ஓ.பன்னீர்செல்வத்தின் சாயம் வெளுப்பதால் நான் மட்டுமல்ல கட்சியிலிருந்து பிரிந்துபோன பல முக்கிய நிர்வாகிகள் இனி தினகரனை சந்திக்க வருவார்கள், என்றும் பரிதி கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Parithi Ilamvazhuthi jumped from O.Paneerselvam camp to TTV.Dinakaran supporter and also says O.Pannerselvam is acting well
Please Wait while comments are loading...