For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதியின் உடல்நிலை பற்றி தவறாக பதிவிடக்கூடாது.. கட்சியினருக்கு சீமான் அறிவுரை

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பற்றி பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தவறாக பதிவிடக்கூடாது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியினருக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பற்றி பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தவறாக பதிவிடக்கூடாது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியினருக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.

திமுக தலைவர் கருணாநிதிக்கு இரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு அவருக்கு சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Party members should not post against Karunanidhi orders Seeman

நேற்று இரவில் இருந்து அவருக்கு காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வரிசையாக அரசியல் தலைவர்கள் அவரது உடல்நிலை குறித்து விசாரித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் சமூக வலைத்தளங்களில் சிலர் அவர் உடல்நிலை மோசமாக இருக்கும்போது கூட அவருக்கு எதிராக கருத்துக்களை உமிழ்ந்து வருகிறார்கள். சில பாஜக, நாம் தமிழர் ஆதரவாளர்கள் அவருக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியினருக்கு அறிவுரை வெளியிட்டு இருக்கிறார்.

அதில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து பேஸ்புக் உள்ளிட்ட எந்த சமூக இணையதளங்களிலும் எதிர்மறை கருத்துகளை நாம் தமிழர் கட்சியினர் பதிவிடக்கூடாது. பதிவிட்டால் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவர்

கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும். அவர் உடல்நிலை தேறி மீண்டும் அரசியல் தளத்தில் பணியாற்ற வேண்டும், என்றுள்ளார்.

English summary
Party members should not post against Karunanidhi orders Naam Thamizhar Party Cheif Co-Ordinator Seeman
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X