For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'ரெட் அலர்ட்' மக்கள் அச்சப்படுவதற்கு அல்ல.. முன்னெச்சரிக்கையாக இருக்க.. வருவாய் ஆணையர் விளக்கம்!

ரெட் அலர்ட் என்பது மக்கள் அச்சப்படுவதற்கு அல்ல முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே விடுக்கப்பட்டுள்ளது என வருவாய் ஆணையர் சத்தியகோபால் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ரெட் அலெர்ட் கொடுத்தாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது - வெதர்மேன்- வீடியோ

    சென்னை: ரெட் அலர்ட் என்பது மக்கள் அச்சப்படுவதற்கு அல்ல முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே விடுக்கப்பட்டுள்ளது என வருவாய் ஆணையர் சத்தியகோபால் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி மிக கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவை தொடர்ந்து தமிழகத்துக்கும் இந்திய வானிலை மையம் இந்த ரெட் அலர்ட் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

    இதனால் தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் எச்சரிக்கை என்றவுடன் மக்கள் மத்தியில் ஒரு வித அச்ச உணர்வும் ஏற்பட்டுள்ளது.

    மோசமான வானிலை

    மோசமான வானிலை

    கனமழை தொடர்பாகவும் அது குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை கணக்கிட்டும் அந்ததந்த பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கிறது. அந்த வகையில் இதில் வானிலை மிகவும் மோசமாக இருக்கும் என கணக்கிடப்படுவது ரெட் அலர்ட் என அறிவிக்கப்படுகிறது.

    மின் இணைப்பு துண்டிக்கப்படும்

    மின் இணைப்பு துண்டிக்கப்படும்

    இந்த அலர்ட் விடுக்கும்போது, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும். பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்பு, சாலை வசதிகள் துண்டிக்கப்படும். உள்ளுர் நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி அபாயகரமான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்பவையாகும்.

    அச்சப்பட வேண்டாம்

    அச்சப்பட வேண்டாம்

    இந்நிலையில் இதுகுறித்து வருவாய் ஆணையர் சத்திய கோபால் விளக்கமளித்துள்ளார். அதாவது, "ரெட் அலர்ட்" குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம். முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதாலேயே இது போன்ற எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது.

    தடுப்பு நடவடிக்கைகள்

    தடுப்பு நடவடிக்கைகள்

    மாவட்ட ஆட்சியர்கள் 7ஆம் தேதியே முன்னெச்சரிக்கையாக இருக்க கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. வெள்ள பாதிப்பு இடங்கள் கண்டறியபட்டு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க குழுக்கள் அமைக்கபட்டு உள்ளன.

    புயலால் பாதிப்பில்லை

    புயலால் பாதிப்பில்லை

    பருவமழையை எதிர்கொள்வது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு புயலால் எந்த பாதிப்பும் இல்லை. இவ்வாறு சத்தியகோபால் தெரிவித்துள்ளார்.

    English summary
    Revenue Commissioner Sathya Gopal has said people do not afraid of Red alert. Red alert issued for prevention.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X