ஓயாத கதிராமங்கலம் போர்க்களம்... 10 பேரை விடுதலை செய்ய கோரி விடிய விடிய காத்திருப்பு போராட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்: ஓஎன்ஜிசியை கண்டித்து போராட்டம் நடத்திய கதிராமங்கலத்தில் கைது செய்யப்பட்ட 10 பேரை உடனடியாக விடுவிக்கக் கோரி அப்பகுதி மக்கள் காத்திருப்பு போராட்டத்தை விடிய விடிய நடத்தினர்.

கதிராமங்கலம் பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் கிணறுகள் அமைத்து எண்ணெய் எடுத்து வருகிறது. இதற்காக பூமியில் புதைக்கப்பட்ட குழாயில் இருந்து திடீரென எண்ணெய் கசிவு ஏற்பட்டது.

இதனைக் கண்டித்தும் ஓஎன்ஜிசி முற்றிலுமாக கிராமத்தில் இருந்து வெளியேறக் கோரியும் கடந்த மாதம் 30-ந் தேதி கதிராமங்கலம் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்தப் போராட்டத்தை போலீஸார் வன்முறை கலவரமாக மாற்றினார்கள்.

போராட்டக்காரர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இதனைத் தொடர்ந்து பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Old man Protest Against Police Officers in Karur-Oneindia Tamil

இந்நிலையில் ஓஎன்ஜிசி நிறுவனம் அந்த கிராமத்தை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் கைது செய்யப்பட்ட 10 பேரை உடனடியாக விடுவிக்கக் கோரியும் அப்பகுதி மக்கள் கடந்த ஒரு வாரமாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது விடிய விடிய போராட்டங்களில் மக்கள் ஈடுபடும் அளவுக்கு தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kathiramangalam protest intensified from early morning demanding the release of 10 members.
Please Wait while comments are loading...