For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுக, அதிமுகவுக்கு ஓட்டுப்போடாமல் மக்கள் கோபத்தை வெளிப்படுத்துவார்களா?: ராமதாஸ் கேள்வி

நடக்க இருக்கும் தேர்தல்களில் திமுக, அதிமுகவுக்கு ஓட்டுப்போடாமல் மக்கள் கோபத்தை வெளிப்படுத்துவார்களா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Google Oneindia Tamil News

திருச்சி: தமிழக மக்கள் நடக்கவிருக்கும் தேர்தல்களில் ஊழல் கடசிகளான அதிமுக திமுகவுக்கு வாக்களிக்காமல் புறக்கணிப்பார்களா என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்சி சங்கம் ஹோட்டலில் இன்று செய்தியாளர்கள்ளிடம் ராமதாஸ் கூறியதாவது:

அதிமுகவின் ஊழல் பற்றி புள்ளிவிவரத்தோடு தயாரிப்போடு ஆளுநரை சந்தித்து 18 விதமான ஊழல் பட்டியலை கொடுத்தது பாமக தான். நாங்கள் வந்த பிறகு அதனை ஆளுநர் குப்பைத் தொட்டியில் வீசினார். அந்த ஆளுநர் எப்படிப் பட்டவர் என நாடறியும். இப்போது வந்திருப்பவர் நீதியரசராக இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.

People Neglected to vote DMK and ADMK: PMK founder ramadoss question

உழவுக் கருவிகள் வாங்கியதில் 38 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது . உழவுக் கருவிகள் 1.65 லட்சம் என்ற விலையில் வாங்கப்படுகிறது. அதற்கு அரசு 67,000 மானியம் கொடுக்கிறது... சீனாவிலுருந்து 1.56 லட்சம் .. ஆனால் சந்தை விலை 46,000 ரூபாய்க்கு தருகிறது .. கவி அக்ரோ என்ற திருச்சி நிறுவனம் மூலம் பஞ்சாப் ஐ சேர்ந்த நிறுவனம் தயாரித்து கொடுக்கிறது. இதன்படி 1, 10,000 பவர் டிரில்லர் மூலமாக 44 கோடி ஊழல் அதில் 38 கோடி அமைச்சர் பெருமக்களின் மேலிடத்துக்கு சென்றதாக சொல்லப்படுகிறது.

மாநில கட்சிகளுக்கு ஆண்ட, ஆளுகிற கட்சிகளுக்கு இந்த மூன்று தொகுதிகளில் ஓட்டுப் போட ஏதாவது ஒரு காரணம் இருக்க முடியுமா... அதிமுக 2011 லிருந்து இது வரை 66 மாசம் என்ன சாதனை ... மின் துறையில் தொடர் ஊழல் , புள்ளி விவரத்திலும் நான் குறிப்பிட்டுள்ளேன்... 50,000 கோடிக்கு மேல் இந்த துறையில் ஊழல்... 88 லட்சம் பேருக்கு வேலையில்லாத் திண்டாட்டம்... 69,444 ஒவ்வொரு நபரின் மீதும் கடன் சுமை ஏற்றப் பட்டுள்ளது.

110 விதியின் கீழ் 600 திட்டங்கள், ஆனால் அவற்றில் எதுவும் நிறைவேற்றப் படவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் படவில்லை... திமுக நாணயத்தின் அடுத்த பக்கம்... அதிமுக - திமுக இரண்டு கட்சிக்கும் எந்தவிதமான வித்தியாசமும் இல்லை... இரண்டு தொகுதிகளில் பணப் பட்டுவாடா வெகு விமர்சையாக நடக்கிறது... இரண்டு திராவிட கட்சிகளும் வெளிப்படையாக கொள்ளை அடித்தன.

காவிரி ஒழுங்கு குழு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இரு திராவிட கட்சிக்கும் அக்கறை இல்லை... காவிரிப் பாசனப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட மண்டலங்களாக அறிவிக்கப்பட வேண்டும்... அதாவது அதனை ஆங்கிலத்தில் புரடெக்டடு அக்ரிகல்சர் ஷோன்கள் எனக் கூறுவார்கள்... மக்களின் கோரிக்கை, எங்களின் கோரிக்கை. ஏக்கருக்கு 25,000, தொழிலாளருக்கு 25,000...என விவசாய சங்கங்கள் விளம்பரத்துக்கும், வியாபாரத்துக்குமாக பச்சைத் துண்டு சங்கங்கள் சில அவ்வப்போது ஆர்ப்பாட்டம் செய்கின்றன...

தமிழக அரசு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறதா என்று சென்னை உயர் நீதி மன்றம் கேட்டுள்ளது... இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வேண்டும்... 45,000 கோடி நிதிப் பற்றாக்குறை நடப்பாண்டில் ஏற்பட்டுள்ளது. நீதித் துறையே நிதிப் பற்றாக்குறையில் இருக்கிறது... இது நல்ல நிர்வாகத்துக்கான அடையாளம் அல்ல... தன்மானத்தை விலை பேசுகிற தேர்தலாக இது அமைந்திருக்கிறது... வாக்குக்கு விலை பேசி வருகிறார்கள்.

இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

English summary
PMK founder ramadoss question the People Neglected to vote DMK and ADMK in forth coming assembly election cited reason behind they were corrupted parties
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X