முடிச்சூரில் சாலையில் அமர்ந்து மக்கள் போராட்டம் - பேரிடர் மீட்புக்குழு விரைந்தது

Posted By:
Subscribe to Oneindia Tamil
  விடாது கொட்டும் மழை !முடிச்சூரில் சாலையில் அமர்ந்து மக்கள் போராட்டம்- வீடியோ

  சென்னை: குடியிருப்புகளிலும் சாலைகளில் தேங்கியுள்ள நீரை அகற்ற கோரி தாம்பரம்- முடிச்சூர் சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முடிச்சூருக்கு பேரிடர் மீட்புக்குழு விரைந்துள்ளது.

  கடந்த திங்கட்கிழமை பெய்த மழைக்கே முடிச்சூரில் வெள்ளம் தேங்கியது. விடாமல் பெய்து வரும் மழையால் முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகள் தனி தீவுகளாக மாறியுள்ளன.

  People stage road roko in mudichur Chennai

  குடியிருப்புகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். தேங்கியுள்ள நீரை அகற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  சாலைகளில் வெள்ளநீரில் அமர்ந்து 'பாரு பாரு நல்லா பாரு' என்று கூறி முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  வெள்ளநீரை வெளியேற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் முடிச்சூருக்கு பேரிடர் மீட்புக்குழு விரைந்துள்ளது.

  வெள்ளநீர் விரைவில் வெளியேற்றப்படும் என்றும், பேரிடர் மீட்புக்குழு விரைந்துள்ளதாகவும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் கூறியுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Low-lying areas in Chennai were the worst hit as water entered many houses.Mudichur near Thambaram. People to stage protest in Thambaram - Mudichur road.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற