• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெரியார் பிறந்த மண்ணில் யாரும் கால் வைக்க முடியாது... வானர சேனை வாளை சுழற்றுவதா? - திருச்சி சிவா

By Mayura Akhilan
|
  பெரியார் பிறந்த மண்ணில் யாரும் கால் வைக்க முடியாது...திருச்சி சிவா

  ஈரோடு: இந்தியாவை ஒரு குடையின் கீழ் ஆள நினைத்த மவுரிய பேரரசும், முகலாய பேரரசும் கூட இந்தியாவில் கால் வைக்க முடியவில்லை என்று ஈரோட்டில் நடைபெறும் திமுக மண்டல மாநாட்டில் பேசிய திருச்சி சிவா கூறியுள்ளார்.

  திமுக மண்டல மாநாடு இன்று ஈரோட்டில் தொடங்கியது. முக்கிய தலைவர்கள் பேசினர். திருச்சி சிவா ஸ்டாலினை அதிகமாகவே புகழ்ந்தார். எல்லா சாலைகளும் ஈரோட்டை நோக்கி என்பார்கள். இது மிகப்பிரம்மாண்டமான மண்டல மாநாடு. இது அழைத்து வரப்பட்ட கூட்டமல்ல. அறிக்கையை பார்த்து வந்த கூட்டம். தமிழ்நாடு நம்பிக்கையோடு உங்களை பார்க்கிறது.

  நால்வர்கள்

  நால்வர்கள்

  மாபெரும் சரித்திரத்தின் தொடர்ச்சி நீங்கள் என்று கூறிய சிவா, சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில், அலெக்சாண்டர் கிரேகத்தில் நால்வர் சரித்திரத்தை மாற்றினர். காந்திஜி, நேதாஜி, நேருஜி இந்தியாவின் சரித்திரத்தை மாற்றியவர்கள். அதே போல பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் ஆகிய நால்வர் தமிழ்நாட்டின் சரித்திரத்தை மாற்றியவர்கள் என்றார்.

  ஸ்டாலின் முதல்வராவார்

  ஸ்டாலின் முதல்வராவார்

  கோடை காலம் சுட்டெரிக்கும் போது பதவியேற்றுள்ளார் ஸ்டாலின். இது போராட்டம் மிகுந்த காலம் என்றும் பொதுநலம் கருதுபவர்கள் சுயநலனை பார்க்க மாட்டார்கள் என்றார். பெரியார் சிலையில் உள்ள தலையில் கை வைக்க துணிந்து விட்டனர். உங்களின் தேவை என்ன ஆண்டாள் பாடிய தமிழா, அண்ணா முழங்கிய தமிழா? பெரியாழ்வார் மண்ணா, பெரியார் பிறந்த மண்ணா. திமுக ஆட்சி மலர்ந்து ஸ்டாலின் முதல்வராகும் போது நீட் தேர்வு தமிழகத்தில் இருக்காது என்றார்.

  தமிழகத்தை ஆள முடியவில்லை

  தமிழகத்தை ஆள முடியவில்லை

  உலக அளவில் மாவீரன் என்று வர்ணிக்கப்பட்டவர் அலெக்சாண்டர். செங்கிஸ்கான் கொடுங்கோலன் என்கிறார்கள். காரணம் செங்கிஸ்கான் ஆசிய கண்டத்தை சேர்ந்தவன் என்பதால்தான். அலெக்சாண்டர் உலகத்தை எல்லாம் வென்றவர் தமிழகத்தில் கால் வைக்க முடியவில்லை. இந்தியாவை ஒரு குடையின் கீழ் ஆள நினைத்த மவுரியர்களால் தமிழகத்தை ஆள முடியவில்லை. முகலாயர்களால் ஆளுமை செய்ய முடியாத மண் தமிழ்நாடு.

  இது பெரியார் மண்

  இது பெரியார் மண்

  தமிழனைப் போல வாழ்ந்தவனும் இல்லை வீழ்ந்தவனும் இல்லை. இது பெரியார் பிறந்த மண். இனியும் இங்கே யாரும் கால் வைக்க முடியாது. இங்கே பறப்பது கறுப்பு சிவப்பு கொடி. அதை காப்பது நீங்கள். வாளேந்தி நிற்பவனிடம் வானர சேனை வந்து வம்புக்கு நிற்கிறது. வீரன் யார் என்றால் அர்ஜுனன் என்கிறார்கள். ஆனால் இமயம் சென்று கொடியேற்றிய சேரன் செங்குட்டுவன் தான் வீரத்தின் அடையாளம். உலோக கவசத்தோடு பிறந்த கர்ணன், அவன் கொடை வள்ளலா? பாரிதான் கொடை வள்ளல். பாஞ்சாலி அல்ல வழிகாட்டும் பெண் கண்ணகிதான் என்றார் அண்ணா.

  ஸ்டாலின்தான் நம்பிக்கை

  ஸ்டாலின்தான் நம்பிக்கை

  பழித்தவனுக்கு பாடம் புகட்டவே படையெடுத்து சென்றவன் தமிழன். தமிழகத்தில் பகைவர் கூட்டம் பதுங்கி பாய்கிறார்கள். சோடா குடிப்பது தவறு என்றவர்கள் சோடா பாட்டில் வீசுவேன் என்கிறார்கள். ஊடகங்களினால் ஊதுகாமலையான தலைவர்கள் ஆள முயற்சி செய்கிறார்கள். டெல்லியில் பரபரப்பாக உச்சரிக்கின்ற பெயர் ஸ்டாலின். அடுத்து அவர்தான் பலரும் நம்பிக்கையோடு கூறுகிறார்கள் என்றும் திருச்சி சிவா பேசினார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

  மேலும் ஈரோடு செய்திகள்View All

   
   
   
  English summary
  No one can rule in Tamil Nadu said Trichy Siva. Tamil silappathikaram mentioned , chera king sengattuvan with the help of sathavannas had invaded north india and defeated two kings on the North india.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more