பெங்களூரில் தக்காளியை திருடி தமிழகத்தில் விற்ற பாஜக நிர்வாகி.. வெளியான புதிய ஷாக்கிங் தகவல்!
திருப்பத்தூர்: பெங்களூரில் தக்காளி லோடுடன் வந்த மினிலாரியை கடத்தி வந்து தமிழகத்தில் தக்காளி விற்றதாக தனது காதலியுடன் கைதான நபர் பாஜகவை சேர்ந்த நிர்வாகி என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், தக்காளிக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. விவசாயிகளிடம் இருந்து தக்காளியை கொள்முதல் செய்து சந்தைக்கு கொண்டு வரும் வியாபாரிகளும் நல்ல லாபம் பார்த்தனர். தக்காளி பயிரிட்ட விவசாயிகளுக்கும் விலையேற்றம் ஓரளவு கைகொடுத்தது. இருந்தாலும் இடைத்தரர்களின் கொள்ளை லாபத்தால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

மக்கள் தக்காளி வாங்குவதையே குறைக்கும் அளவுக்கு விலையேற்றம் இருந்தது. தக்காளி விலையேற்றம் காரணமாக அதை பயிரிட்ட விவசாயிகள் பலர் இரவு பகலாக தோட்டத்தில் பாதுகாப்புக்கு இருந்ததையும் காண முடிந்தது. ஏன் சில வட மாநிலத்தில் தக்காளி வியாபாரி ஒருவர் பவுன்சரை கூட பாதுகாப்புக்கு வைத்து இருந்தார். விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்த தக்காளி விலையால் அதை பாதுகாக்கவே பெரும்பாடாகி போனது.
லாரியுடன் தக்காளி கடத்தல்: இந்த நிலையில் தான், கர்நாடக மாநிலம் சித்ரதுர்க்கா மாவட்டத்தை சேர்ந்த விவசாயி போரலிங்கப்பா, தனது நிலத்தில் பயிரிட்ட 250 கிலோ தக்காளியை வாகனத்தில் சந்தைக்கு எடுத்து சென்றார். அவரது வாகனம் பெங்களூர் ஊரக மாவட்டம் ஆர்.எம்.சிஆர் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு காரில் நின்று கொண்டு இருந்த மூன்று பேர் தக்காளி ஏற்றி வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி டிரைவரையும் விவசாயி போரலிங்கப்பாவையும் கடுமையாக தாக்கினர்.
மேலும் அவர்களிடம் பணம் கேட்டு அந்த கும்பல் அடித்தது. பணம் இல்லை என்று விவசாயி போரலிங்கப்பா சொன்னதால், கூகுள் பே மூலமாக பணத்தை அனுப்புமாறு கேட்டு மிரட்டியுள்ளது. வங்கியிலும் பணம் இல்லை என்று சொன்னதால் அந்த கும்பலினர் வாகனத்தில் சோதனை செய்தனர். அப்போது அந்த கும்பலினர், வாகனத்தில் தக்காளி இருப்பதை பார்த்ததும் தக்காளியுடன் மினி லாரி வாகனத்தை கடத்தி சென்றனர்.
பாஜக நிர்வாகி கைது: இதுகுறித்து ஆர்எம்சிஆர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், தக்காளி ஏற்றிச்சென்ற லாரியை கடத்தியது தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதில் மினி லாரியுடன் கடத்தப்பட்ட தக்காளி வாணியம்பாடியில் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் தக்காளியை திருடியது பாஜக அமைப்பு சார தொழிலாளர் சங்க திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் பாஸ்கர் என்பது தெரியவந்தது.
ரும் அவரது காதலியும் சேர்ந்து தான் இந்த தக்காளி திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் திருடிய தக்காளியை ரூபாய் 3 லட்சத்துக்கு விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் பாஜக நிர்வாகி மற்றும் அவரது காதலியை கைது செய்தனர். தக்காளி திருட்டில் ஈடுபட்டு கைதான பாஸ்கர் செம்மரக்கடத்தல் வழக்கில் தொடர்புடையவர் என்றும் கூறப்படுகிறது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications